கரணின் 75வது படமாக உருவாகும் ‘கன்னியும் காளையும் செம காதல்’
சிங்கம் சினிமா சார்பில் இயக்குநர் வி.சி.வடிவுடையான் தயாரித்து இயக்கும் படம் 'கன்னியும் காளையும் செம காதல்'. இப்படத்தின் அனைத்து வேலைகளும் நிறைவடைந்து ரிலீஸிற்கு தயாராக உள்ளது. இந்தப்படம் கரணின் 75வது படமாகும்.
கரண், தருண்கோபி, விவேக், திருப்தா, கஞ்சா கருப்பு, கனல் கண்ணன் மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் மிகப் பெரிய பொருட்ச் செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.
இப்படத்தின் பாடல்களையும், டிரைலரையும் வித்தியாசமான முறையில் வெளியிட முடிவு செய்துள்ள படக்குழுவினர், எஃப்.எம், இணையதளம், தொலைக்காட்சி என்று அனைத்து ஊடகங்களிலும் ஒரே சமயத்தில் வெளியிடப் போவதாக படத்தின் இயக்குநர் வி.சி.வடிவுடையான் கூறியுள்ளார்.

பாடலுக்கு வரவேற்பு
‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படத்தில் "கொலகாரா..." என்ற பாடல் எல்லோராலும் நல்ல வரவேற்பை பெற்றது.
‘கன்னியும் காளையும் செம காதல்' படத்திலும் பாடல்களை மிக அழகாக படம் எடுத்திருக்கிறேன் என்கிறார் இயக்குநர் வடிவுடையான்.

கரண் 75
கரணுக்கு இது 75வது படம் என்பதால் நடிப்பில் புதிய சகாப்தம் படைத்துள்ளார். இப்படத்தின் டீசர் இணையத்தளத்தில் வெளியான சில நாட்களிலேயே 60 லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர்.

கரணின் காமெடி
வில்லனாக அறிமுகமாகி இடையில் ஹீரோவாக நடித்து வரும் கரண் இப்படத்தில் நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் முதன்முறையாக நடிக்கிறார்.

மும்பை ஹீரோயின்
‘கன்னியும் காளையும் செம காதல்‘ என்ற படம் மூலம் மீண்டும் ஒரு மும்பை நடிகை திருப்தா பராசர் கோலிவுட்டுக்கு வருகிறார்.

சண்டைக்காட்சிகள்
இப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகளுக்கு ஸ்பெஷலாக 5 கேமராக்களை வரவைத்து 10 நாட்கள் தொடர்ந்து கனல் கண்ணன், மிக அற்புதமாக படமாக்கி கொடுத்திருக்கிறார். இந்த சண்டைக்காட்சி அனைவராலும் பேசப்படும் விதத்தில் வந்துள்ளது." என்று தெரிவித்தார்.

குளு குளு ஏரியாவில்
காஷ்மீர், குற்றாலம், மைசூர், ஊட்டி, மதுரை, தேனி போன்ற பகுதியில் ஷூட்டிங் நடந்துள்ளது.


Click it and Unblock the Notifications











