»   »  4வது முறையாக ஜோடி மாற்றும் பிபாஷாவுக்காக 2வது மனைவியை கழட்டிவிட்ட நடிகர்!

4வது முறையாக ஜோடி மாற்றும் பிபாஷாவுக்காக 2வது மனைவியை கழட்டிவிட்ட நடிகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை பிபாஷா பாசு நான்காவதாக காதலில் விழுந்துள்ளார். அவரைத் திருமணம் செய்து கொள்வதற்காக, தனது 2 வது மனைவி ஜெனிபர் வின்ஜெட்டிடம் இருந்து, சட்டப்படி விவாகரத்து பெற்றிருக்கிறார் பாலிவுட் நடிகர் கரண் சிங் குரோவர்.

34 வயதாகும் கரண் சிங் குரோவர் பாலிவுட் படங்கள் மற்றும் இந்தி சீரியல்களில் நடித்துப் புகழ்பெற்றவர். முதலில் நடிகை ஷ்ரத்தா நிகமை திருமணம் செய்து ஒரே வருடத்தில் விவாகரத்து செய்து கொண்டார்.

பின்னர் மற்றொரு நடிகையான ஜெனிபர் வின்ஜெட்டை திருமணம் செய்து, தற்போது அவரிடமிருந்தும் சட்டப்படி விவாகரத்து பெற்றிருக்கிறார்.

கரண் சிங் குரோவர்

கரண் சிங் குரோவர்

பாலிவுட் நடிகரான கரண் சிங் குரோவர் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துப் புகழ்பெற்றவர். மேலும் தொலைக்காட்சித் தொடரில் நடிப்பதற்காக அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. 34 வயதான கரண் தற்போது அவரது 2 வது மனைவி ஜெனிபர் வின்ஜெட்டை விவாகரத்து செய்திருப்பது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷ்ரத்தா நிகம்

ஷ்ரத்தா நிகம்

கரண் சிங் தனது 26 வது வயதில் தன்னை விட 3 வயது அதிகமான நடிகை ஸ்ரத்தா நிகமை மணந்து கொண்டார். ஆனால் திருமணமான ஒரே வருடத்தில் இருவரும் பிரிந்து விட்டனர்.

ஜெனிபர் வின்ஜெட்

ஜெனிபர் வின்ஜெட்

நடிகை ஜெனிபர் வின்ஜெட் மூலம் மீண்டும் ஒரு காதல் கரண் சிங் வாழ்க்கையில் வந்தது. இருவரும் கடந்த 2012 ம் ஆண்டு முறைப்படி மணந்து கொண்டனர். ஆனால் 3 வருடங்களில் இந்தக் காதலும் முடிவுக்கு வந்து இருவரும் விவாகரத்து செய்து கொள்ள நீதிமன்றப் படியேறினர்.

பிபாஷா பாசு

தற்போது 2 வது மனைவி ஜெனிபர் வின்ஜெட்டிடம் இருந்து கரணுக்கு முறைப்படி விவாகரத்து கிடைத்துள்ளது. இதனால் தனது காதலியான பிபாஷா பாசுவை அவர் விரைவில் மணந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு வெளியான அலோன் படத்தில் கரண் சிங், பிபாஷாவுடன் இணைந்து நடித்திருந்தார்.

நான்காவது முறையாக ஜோடி மாற்றும் பிபாஷா...

நான்காவது முறையாக ஜோடி மாற்றும் பிபாஷா...

பிபாஷா பாசுவின் காதல்கள் ஊர் அறிந்தது. ராஸ் படத்தில் நடித்ததிலிருந்து அவரும் டினு மொரியாவும் சேர்ந்து வாழ்ந்தனர். 2002 வரை இந்தக் காதல் நீடித்தது. பின்னர் ஜிஸ்ம் படத்தில் நடித்தபோது ஜான் ஆபிரகாமுடன் அவருக்கு காதல் மலர்ந்தது. இருவரும் பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து 2011-ல் பிரிந்துவிட்டனர். 2014 வரை ஹர்மன் பவேஜாவுடன் சுற்றிக் கொண்டிருந்தார் பிபாஷா.

3 வயசு ஜாஸ்தி

3 வயசு ஜாஸ்தி

அவரது நான்காவது ஜோடிதான் இந்த கரண்சிங். இருவருக்கும் 3 வயது வித்தியாசம் உள்ளது. அதாவது கரண்சிங்கை விட 3 வயது மூத்தவர் பிபாஷா என்பது குறிப்பிடத்தக்கது.

கோவாவில் பிறந்தநாள்

ஆனால் அதையெல்லாம் பார்க்கும் நிலையிலா காதல் விட்டு வைக்கிறது... 2 தினங்களுக்கு முன் வந்த தனது பிறந்தநாளை கரண் சிங், பிபாஷா பாசுவுடன் கோவா கடற்கரையில் கொண்டாடி இருக்கிறார். மேலும் அவர்கள் இருவரும் அங்கு மோதிரங்களை மாற்றிக் கொண்டதாகவும் கூறுகின்றனர். கோவாவில் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை இருவருமே சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

திருமணம்

கரணுக்கு விவாகரத்து கிடைத்திருப்பதால் தங்களது திருமணம் பற்றிய அறிவிப்பை இருவரும் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகின்ற மார்ச் மாதம் இருவரும் மோதிரங்களை மாற்றி தங்களின் திருமண அறிவிப்பை வெளியிடவிருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கரணைவிட பிபாஷாவிற்கு 3 வயது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கரண் சிங் குரோவர் - ஜெனிபர் வின்ஜெட் இருவரின் விவாகரத்து தொடர்பான ஆவணங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

English summary
Karan Singh Grover and Jennifer Winget, at one time tellyland’s hot couple. The two are now officially divorced, due to the later's love affair with Bipasha Basu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil