ஸ்ருதிகா ஜெயிச்சிருந்தா தென்னிந்தியாவே கொண்டாடி இருக்கும்.. இந்தி பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார்?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது அனைவருக்கும் பிடித்தமான நிகழ்ச்சியாகவே இருக்கிறது. இதுவரை தமிழில் பிக் பாஸ் 8 சீசன்களை கடந்து இருக்கும் நிலையில், இந்த பிக் பாஸ் 18 சீசனில் இந்த முறை, கரண் வீர் டைட்டிலை வென்றுள்ளார். இந்தி பிக் பாஸிசில் ஸ்ருதிகா ஜெயிச்சிருந்தா தென்னிந்தியாவே கொண்டாடி இருக்கும் என்று இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
தேங்காய் சீனிவாசனின் பேத்தியான ஸ்ருதிகா, தமிழில் ஸ்ரீ என்ற படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின், ஆல்பம், நள தமயந்தி, தித்திக்குதே போன்ற படங்களில் நடித்தார். அந்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு போகாததால், அர்ஜுன் ராஜை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். திருமணத்திற்கு பின் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த ஸ்ருதிகா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரீ என்ட்ரி கொடுத்தார்.

பிக் பாஸ் சீசன் 18: அந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், இந்தியில் 18வது சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் பெண்ணான ஸ்ருதிகா கலந்து கொண்டது இதுவே முதன்முறை. கடினமான டாஸ்குகளை அவர் துணிச்சலாக எதிர்கொண்டு விளையாடினார். பல சந்தர்ப்பங்களில் உணர்ச்சிவசப்பட்ட ஸ்ருதிகா மகிழ்ச்சியிலும் சோகத்திலும் தனது இயல்பை வெளிப்படுத்தினார். ஸ்ருதிகாவிற்கு சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய ஆதரவு இருந்தது. இதனால், இவர் இறுதி போட்டிவரை சென்று டைட்டிலை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 94 நாள்களில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியேறினார்.
டைட்டிலை வென்றார்: இந்நிலையில், இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில், கரண் வீர் மெஹ்ரா டைட்டிலை வென்று ரூ. 50 லட்சம் ரூபாய் ரொம்க பணத்தை வீட்டிற்கு எடுத்து சென்றார். கரண் வீர் மெஹ்ரா, விவியன் டிசேனா, ஈஷா சிங், சும் தரங், ரஜத் தலால் மற்றும் அவினாஷ் மிஸ்ரா ஆகியோரை இறுதி வரை சென்று பிக் பாஸ் வீட்டில் 105 நாட்கள் இருந்த நிலையில் அதிக வாக்குகளை பெற்ற கரண் வீர் மெஹ்ரா டைட்டிலை வென்றார்.

என்னை கொண்டாடினார்கள்: இதுகுறித்து பேசிய ஸ்ருத்திகா அர்ஜுன், பிக் பாஸ் வீட்டிற்குள் 105 நாட்கள் இருப்பது என்பது சாதாரணமான விஷயம் இல்லை. வெற்றி பெற்றது யாராக இருந்தாலும் சரி, அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். அந்த ஐந்து இறுதிப் போட்டியாளர்களில் , வெற்றியாளர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். ஹிந்தி பிக்பாஸில் கலந்து கொள்ளும்போது எனக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால், இந்தி பிக் பாசும், தமிழ் பிக் பாசும் ஒரே நேரத்தில் ஆரம்பித்ததால், எனக்கு வரவேற்பு கிடைக்குமா? என்று யோசித்தேன். ஆனால், தமிழ் ரசிகர்கள் இணையத்தில் என்னை கொண்டாடியதைப்பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். பிக் பாஸ் மூலம் பாலிவுட்டிலும் என் பெயரை நிலை நிறுத்திவிட்டேன் அதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பேசி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











