»   »  கொக்கி போடும் கரண்!

கொக்கி போடும் கரண்!

Subscribe to Oneindia Tamil

கொக்கி நாயகன் கரன் செல்போன் மூலம் திருட்டு விசிடிக்கு எதிராக நூதனபிரசாரத்தை மேற்கொண்டுள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக ஏராளமான மலையாளப் படங்களில் நடித்து, வளர்ந்துவாலிபன் ஆனவுடன் நம்மவர் படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு வந்தவர் கரண்.

நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பது என்ற கொள்கைக்கு மாறியதால் சமீபகாலமாக வாய்ப்புக்கள் இல்லாமல் போயின.

இதையடுத்து கொக்கி படத்தை இன்னொருவருடன் சேர்ந்து கரணே தயாரித்தார்.படமும் ஹிட்டாகி அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.


இந் நிலையில் திருட்டு விசிடியால் கொக்கி படத்தின் வசூலும், வெற்றியும்பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக அதிகமாக மெனக்கெட்டு வருகிறார் கரண்.

திருட்டு விசிடிக்கள் விற்பவர்களை கண்காணித்து தானே போலீஸாரிடம் போட்டுக்கொடுத்து உள்ளே தள்ளி வருகிறார்.

அத்தோடு நில்லாமல் இப்போது பொதுமக்களிடையே நேரடியாக டீல் செய்யஆரம்பித்துள்ளார். அதாவது, செல்போன் மூலமாக பொதுமக்களிடம் பேசும் கரண்,அன்பானவர்களே, நான் நடித்துள்ள கொக்கி படத்தை தியேட்டரில் மட்டுமேபாருங்கள்.

தயவு செய்து எங்களின் உழைப்பை சுரண்டும் திருட்டு விசிடியில் படத்தைப்பார்க்காதீர்கள், எனது வேண்டுகோளை கேட்டதற்காக நன்றி என்று கோரிக்கைவிடுக்கிறார் கரண்.


செல்போனில் பேசுவது கரண்தானா அல்லது கரணின் ரெக்கார்ட் செய்யப்பட்ட குரலாஎன்பதை அறிய கரணைப் பிடிக்க முயற்சித்தோம். ஆனால் பார்ட்டி சிக்கவில்லை.

திருட்டு விசிடிக்காரர்களை கொக்கி போட்டு இழுக்கும் கரணின் முயற்சி பலித்தால்சந்தோஷம்தான்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil