எனக்கு ஒன்னுனா ஓடிவருவாரு.. கடைசியா பேசும் போது சொன்னேனே.. ஹுசைனி போய்ட்டியே கண்கலங்கிய கலா மாஸ்டர்!

சென்னை: நடிகரும், கராத்தே வீரருமான ஹுசைனி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 22 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, ஷிஹான் ஹுசைனி இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், கலா மாஸ்டர் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், காலையில் எழுந்ததும் ஒரு அதிர்ச்சியான செய்தி, ஹுசைனி உயிரிழந்த செய்தி கேட்டு நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். அவரிடம் எனக்கு பிடித்த விஷயம், அவரின் தைரியம் தான், எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று எப்போதும் பேசுவார். நான் அசிஸ்டன்டாக வேலை பார்த்ததில் இருந்தே எனக்கு ஹுசைனியை நன்றாக தெரியும், என்னுடைய நடனப்பள்ளியின் முதல் மாணவர் அவர். ரொம்ப நல்ல மனுஷன். எனக்கு ஒன்னுனா எந்த நேரமாக இருந்தாலும் ஓடி வருவாரு, எங்க பார்த்தாலும் ஓடி வந்து பேசுவார்.

Shihan Hussaini death Kala Master

கண்கலங்கிய கலா: அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விபட்டதும், போன் பண்ணி பேசி பார்க்க வருகிறேன் என்று கேட்டேன். ஆனால், அவர் வேண்டாம் கலா, உனக்கு இன்ஃபெக்ஷன் ஆகிவிடும் என்று சொல்லிவிட்டதால், நான் பார்க்கவில்லை. ஆனால், தினமும் அவருக்கு போன் செய்து, ஹுசைனியின் காதில் இந்த மந்திரம் சொல்லுங்க எல்லாம் சரியாக விடும் என்று சொன்னேன். அப்போது அவர், ஐசியூவிற்கு போனா திரும்பி வருவேனா என்று தெரியாது என்று கூறியிருந்தார். அதே போல ஐசிவிற்கு போனவர் திரும்பி வரவே இல்லை. ஐ மிஸ் யூ ஹுசைனி என கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு இருந்தார்.

பொதுமக்கள் அஞ்சலி: மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த ஷிகான் ஹுசைனி, தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்திருந்தார். நள்ளிரவு 1.45 மணியளவில் ஷிகான் ஹுசைனி உயிரிழந்தார். தற்போது, அவரின் உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள வில்வித்தை சங்கத்தில் இன்று மாலை 7 வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன்பின், அவரது சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்படும் என அறிவித்துள்ளனர்.

https://www.instagram.com/reel/DHm2mdOyeGr/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X