கடைசி ஆசை நிறைவேறாத கராத்தே ஹுசைனி.. வீட்டை எந்த நடிகருக்கு எழுதி வெச்சிருக்காரு தெரியுமா?
சென்னை: கராத்தே ஹுசைனி என்று அழைக்கப்பட்ட ஷிஹான் ஹுசைனிக்கு ரத்த புற்றுநோய் வந்திருந்தது. அதுகுறித்து அவரே தனியார் யூடியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டியின் மூலம்தான் மற்றவர்களுக்கு தெரியவந்தது. பவன் கல்யாண் உள்ளிட்டோருக்கு கராத்தே பயிற்சி அளித்த அவர் எப்படியாவது அந்த நோயிலிருந்து மீண்டும் உடல்நலம் பெற வேண்டும் என்று பலரும் வேண்டினார்கள். ஆனால் அவர் அண்மையில் உயிரிழந்தார். அது பலரிடமும் சோகத்தை ஏற்படுத்தியது.
ஷிஹான் ஹுசைனி மதுரையை பூர்வீகமாகக் கொண்டவர். அவரது தந்தை ஒரு வரலாற்று ஆசிரியர் ஆவார். ஹுசைனிக்கு சிறு வயதிலிருந்தே கராத்தே மேல் மிகுந்த ஈடுபாடு இருந்தது. இதன் காரணமாக அதனை முறையாக கற்றுக்கொண்டு கல்லூரி காலத்திலேயே பலருக்கும் கராத்தே பயிற்சி கொடுத்து கராத்தே ஹுசைனியாக மாறினார். அதோடு அவருக்கு சினிமா ஆர்வமும் இருந்தது. அதனைத் தொடர்ந்து கே.பாலசந்தரால் புன்னகை மன்னன் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
சினிமாவில் பணியாற்றிய ஹுசைனி: புன்னகை மன்னன் படத்துக்கு பிறகு ஒரு படத்தில் ஹீரோவாக நடித்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி வரிசையாக வாய்ப்புகள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட சூழலில் விஜய் நடித்திருந்த பத்ரி படத்தில் அவருக்கு பயிற்சியாளராக தோன்றினார் ஹுசைனி. அப்படம் ஓரளவு பிரபல்யத்தை அவருக்கு பெற்றுக்கொடுத்தது. அதேபோல் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்திலும் நடிப்பதற்கு அவரை கௌதம் மேனன் அணுகியதாகவும் ஒரு பேச்சு உண்டு. கடைசியாக ஹுசைனி காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார்.

பிரபலங்களுக்கு பயிற்சியாளர்: இதற்கிடையே தன்னுடைய அடிநாதமான கராத்தேவையும், கராத்தே சொல்லிக்கொடுப்பதையும் அவர் விடவில்லை. சாமானியர்களுக்கு மட்டுமின்றி பிரபலங்களுக்கும் அவர் கராத்தே மாஸ்டராக இருந்திருக்கிறார். பவன் கல்யாணுக்கு இவர்தான் கராத்தே சொல்லிக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பலருக்கும் வில்வித்தையையும் சொல்லிக்கொடுத்திருக்கிறார் அவர். இதனால் தமிழ்நாடு முழுவதும் பயங்கரமாக ஃபேமஸ் ஆனவர். திருமணம் எதுவும் அவர் செய்துகொள்ளவில்லை.
ரத்த புற்றுநோய்: அவருக்கு ஒரு சகோதரர், இரண்டு சகோதரிகள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்கள். இப்படிப்பட்ட சூழலில் தனக்கு ரத்த புற்றுநோய் வந்திருப்பதாக சில வாரங்களுக்கு முன்பு ஒரு பேட்டி கொடுத்தார். அதனையடுத்து அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் உதவி செய்தார்கள். அதேசமயம் தான் கராத்தே சொல்லிக்கொடுக்கும் இடத்தை பவன் கல்யாண் வாங்கிக்கொள்ள வேண்டும்; விஜய், உதயநிதி போன்றோர் எல்லாம் தமிழ்நாட்டில் வீட்டுக்கு ஒரு வில்வித்தை வீரர், வீராங்கனையை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
உயிரிழந்த ஹுசைனி: அவர் மேற்கூறிய கோரிக்கைகளை ஓபனாகவே பேட்டியில் தெரிவித்தார். ஆனால் விஜய்யோ, பவன் கல்யாணோ ஹுசைனி உயிரோடு இருந்தவரை நேரில் வந்து சந்திக்கவில்லை. சிகிச்சை பலனின்றி அண்மையில் அவர் உயிரிழந்ததை அடுத்து பவன் கல்யாண் மட்டும் இரங்கல் அறிக்கை விட்டிருந்தார். நேரில் பார்க்காத விஜய் உள்ளிட்டோரை ரசிகர்கள் ஒருதரப்பினர் கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்நிலையில் ஹுசைனி குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
என்ன தகவல்?: அதாவது அவர் தனது வீட்டை பவன் கல்யாண் பெயருக்கு எழுதி வைத்திருப்பதாகவும்; அந்த வீட்டை தனது நினைவிடமாக மாற்ற வேண்டும் என்பதுதான் அவரது ஆசை என்றும் கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் நேரில் வந்து சந்திக்காத பவன்; ஹுசைனியின் இந்த ஆசையையாவது நிறைவேற்றுவாரா என்று பேச தொடங்கியிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











