ரத்த புற்றுநோய்.. நடிகர் கராத்தே ஹுசைனி மரணம்.. ரசிகர்கள் உச்சக்கட்ட சோகம்
சென்னை: கராத்தே ஹுசைனி என்று அறியப்படும் ஷிஹான் ஹுசைனி ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். அவரது சிகிச்சைக்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பிலும் மற்ற சிலர் சார்பிலும் உதவிகள் செய்யப்பட்டன. எப்படியாவது அதிலிருந்து மீண்டுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அவரின் மாணவர்கள், மாணவிகளிடமும் ரசிகர்களிடமும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மதுரையை பூர்வீகமாகக் கொண்ட ஷிஹான் ஹுசைனி கராத்தே மீது அபரிமிதமான பற்று கொண்டவர். இதன் காரணமாக தனது பதின்ம் வயதிலிருந்தே கராத்தே வீரராக ஜொலிக்க ஆரம்பித்தார். குறிப்பாக கல்லூரியில் படிக்கும்போது அவர் முழு கராத்தே வீரராக மாறிவிட்டார். இவரும் மறைந்த நடிகர் விவேக்கும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கராத்தேவில் ஆர்வம் கொண்டிருந்த ஹுசைனிக்கு சினிமா மீதும் அந்த சமயத்தில் ஆர்வம் பிறந்தது.
புன்னகை மன்னன் ஹுசைனி: அந்தவகையில் கே.பாலசந்தர் கமல் ஹாசன், ரேவதி, ரேகா உள்ளிட்டோரை வைத்து இயக்கிய புன்னகை மன்னன் திரைப்படத்தில் ஷிஹான் ஹுசைனி அறிமுகமானார். அதில் சிறிய வேடம் ஏற்றிருந்த அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வர தொடங்கின. அதன்படி அவர் படங்களில் நடித்தாலும் எதிர்பார்த்த திருப்புமுனை அவருக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் தன்னை லைம் லைட்டிலேயே வைத்துக்கொண்டார். அதற்கு காரணம் கராத்தேதான்.

பிரபலங்களின் மாஸ்டர்: பவன் கல்யாண், விஜய் உள்ளிட்டோருக்கு கராத்தே கற்றுக்கொடுத்தார். செலிபிரிட்டிகள் மட்டுமின்றி பல சாதாரண மாணவர், மாணவிகளுக்கும் அவர் கராத்தே மாஸ்டராக திகழ்ந்தார். அதுமட்டுமின்றி சின்னத்திரையில் தோன்றியும் கராத்தே சொல்லிக்கொடுத்த பெருமைக்குரியவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. கராத்தே மாஸ்டர் மட்டுமின்றி சிலை வடிக்கும் திறமை, ட்ரம்ஸ் வாசிக்கும் திறமை, ஆங்கிலத்தில் பாடல்கள் எழுதி அவரே இசையமைப்பது, வில் வித்தை கற்றுக்கொடுப்பது, அதிரடி சமையல் என்று நிகழ்ச்சி நடத்தியது என பல துறைகளில் தன்னை வளர்த்தெடுத்துக்கொண்டே வந்தார். அதேபோல் விஜய் நடித்த பத்ரி படத்தில் நடித்தும் ஃபேமஸ் ஆனார் அவர்.
ரத்த புற்றுநோய்: சூழல் இப்படி இருக்க சில வாரங்களுக்கு முன்பு தனியார் யூடியூப் சேனல்களுக்கு அவர் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் தனக்கு ரத்த புற்றுநோய் இருப்பதாகவும்; தான் உயிர் வாழ்வதற்கு ஒரு நாளுக்கே இரண்டு யூனிட் ரத்தம் வேண்டும் என்று கூறி அதிர்ச்சி கிளப்பினார். ரத்தத்தால் மறைந்த ஜெயலலிதாவுக்கு சிலை வடித்த ஹுசைனிக்கு ரத்த புற்றுநோய் என்கிற செய்தி பலரையும் சோகத்தில் தள்ளியது. இருப்பினும் அவர் உச்சக்கட்ட தைரியத்தோம், தன்னம்பிக்கையோடும்தான் இருந்தார். மேலும் விஜய், பவன் கல்யாண், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரிடம் வீட்டுக்கு ஒரு வில்வித்தை வீரர், வீராங்கனையை உருவாக்க வேண்டும், தனது கராத்தே பயிற்சி கூடம் இருக்கும் இடத்தை பவன் கல்யாண் வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள்களை முன்வைத்தார்.
மரணமடைந்த ஹுசைனி: உதயநிதி ஸ்டாலின் சார்பில் ஹுசைனியின் சிகிச்சைக்கு உதவிகளும் செய்யப்பட்டன. அதற்கு ஹுசைனியும் தனது நன்றியை தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி அப்போலோ மருத்துவமனையில் நள்ளிரவு 1.45 மணிக்கு உயிரிழந்தார். எப்படியாவது ரத்த புற்றுநோயிலிருந்து மீண்டு வந்துவிடுவார் என்று எதிர்பார்த்திருந்த அவரது மாணவ, மாணவிகளுக்கும், ரசிகர்களுக்கும் இது உச்சக்கட்ட அதிர்ச்சியையும் சோகத்தையும் உருவாக்கியிருக்கிறது. மேலும் ஹுசைனி வைத்த வேண்டு


Click it and Unblock the Notifications











