மூத்த மகளின் 25வது பர்த்டே.. 2வது மனைவி கரீனா கபூர் கர்ப்பம்.. டபுள் சந்தோஷத்தில் சைஃப் அலி கான்!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானுக்கு இன்று டபுள் கொண்டாட்டம் என்றே சொல்லலாம்.
அவரது மூத்த மகளும் பாலிவுட் நடிகையுமான சாரா அலி கான் இன்று தனது 25வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இந்நிலையில், இதே நாளில் சைஃப் அலி கானின் 2வது மனையும் பிரபல நடிகையுமான கரீனா கபூர் கர்ப்பமாக இருக்கும் செய்தியும் வெளியாகி வைரலாகி வருகிறது.

25வது பிறந்தநாள்
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானுக்கும் அவரது முதல் மனைவி அம்ரிதா சிங்குக்கும் மகளாக பிறந்த பாலிவுட்டின் இளம் நடிகை சாரா அலி கான் இன்று தனது 25வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். காலை முதலே சாரா அலி கானின் பிறந்தநாளை பாலிவுட் ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில், தற்போது அதனை மிஞ்சும் அளவுக்கு இன்னொரு ஹேப்பி நியூஸ் வந்துள்ளது.

கரீனா கபூர் கர்ப்பம்
பாலிவுட்டின் முன்னணி நடிகையான கரீனா கபூர் இரண்டாவது முறையாக கர்ப்பமாகி உள்ளார். 40 வயதாகும் கரீனா கபூர், கடந்த 2012ம் ஆண்டு பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு தைமூர் எனும் 3வயது மகன் உள்ள நிலையில், தற்போது இருவரும் இரண்டாவது குழந்தையை எதிர்நோக்கி உள்ளனர்.

4வது குழந்தை
முதல் மனைவி அம்ரிதா சிங்குக்கு சாரா அலி கான் மற்றும் இப்ராஹிம் அலி கான் என இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், இரண்டாவது மனைவி கரீனா கபூர் தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். இதன் மூலம் 4வது குழந்தைக்கு விரைவிலேயே தந்தையாகும் பாக்கியம் பெற்றுள்ளார் நடிகர் சைஃப் அலி கான்.

சுஷாந்த் சிங்கின் கடைசி படத்தில்
சமீபத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தில் பெச்சாரா படத்தில், கெளரவ தோற்றத்தில் இசை அமைப்பாளராக ஒரே ஒரு காட்சியில் நடித்து அசத்தி இருப்பார் சைஃப் அலி கான். சைஃப் அலி கானின் மூத்த மகள் சாரா அலி கான் சுஷாந்த் சிங்கின் கேதார்நாத் படத்தின் மூலமாக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

குவிகிறது பாராட்டு
அமீர்கானின் லால் சிங் சத்தா படத்தில் நாயகியாக நடித்து வரும் கரீனா கபூர், கர்ப்பமாக இருக்கும் செய்தி அறிந்த பாலிவுட் ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் இந்த நட்சத்திர தம்பதியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். #KareenaKapoorKhan என்ற ஹாஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











