கரீனா என் தோழி ஆனால் முதலில் என் அப்பாவின் மனைவி: தனுஷ் ஹீரோயின்
மும்பை: கரீனா கபூர் என் தந்தையின் மனைவி என்று பாலிவுட் நடிகை சாரா அலி கான் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சயிப் அலி கானின் மகள் சாரா குண்டாக இருந்தார். சினிமா எல்லாம் நமக்கு ஒத்து வராது என்று படிப்பில் கவனம் செலுத்திய அவர் தனது உடல் எடையை வெகுவாக குறைத்துவிட்டு நடிகையாவிட்டார்.

அவர் எடையை குறைத்து நடிக்க வந்ததற்கு அவரின் மாற்றாந்தாயான நடிகை கரீனா கபூர் தான் காரணம் என்று கூறப்படுகிறது. கரீனா தனது தந்தையின் இரண்டாவது மனைவி என்றாலும் சாராவும் சரி, அவரின் தம்பி இப்ராஹிமும் சரி அவருடன் நட்பாக பழகுகிறார்கள்.
இந்நிலையில் கரீனா கபூர் குறித்து சாரா கூறியதாவது,
கரீனாவை என் தோழியாகவே பார்க்கிறேன். ஆனால் அதை விட அவர் என் தந்தையின் மனைவி. கரீனாவை நான் மதிக்கிறேன். அவர் என் தந்தையை மகிழ்ச்சியாக வைத்துள்ளார். நானும், கரீனாவும் ஒரே துறையை சேர்ந்தவர்கள். அதனால் நாங்கள் சந்திக்கும்போது எல்லாம் படத்தை பற்றி தான் பேசுவோம் என்றார்.
சயிப் அலி கான் தனது முதல் மனைவியான நடிகை அம்ரிதா சிங்கை 2004ம் ஆண்டு விவாகரத்து செய்தார். பின்னர் 2012ம் ஆண்டு கரீனாவை மறுமணம் செய்தார். சயிப், அம்ரிதா தம்பதிக்கு சாரா என்கிற மகளும், இப்ராஹிம் என்கிற மகனும் உள்ளனர்.
சயிப், கரீனா திருமணத்திற்கு தன் அம்மா தான் தனக்கு புத்தாடை உடுத்தி, மேக்கப் போட்டுவிட்டதாக சாரா முன்பு தெரிவித்தார். சாரா கரீனாவை கே அல்லது கரீனா என்று தான் அழைக்கிறார். கரீனாவும் அதை தான் விரும்புகிறார்.
சாரா அலி கான் ஆனந்த் எல் ராய் தனுஷை வைத்து இயக்கும் முக்கோண காதல் கதை கொண்ட படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார். சாரா தற்போது வருண் தவானுடன் சேர்ந்து கூலி நம்பர் 1 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் இம்தியாஸ் அலி இயக்கத்தில் கார்த்திக் ஆர்யனுடன் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.


Click it and Unblock the Notifications











