சூர்யாவுடன் ஜோடி சேரும் கரீனா கபூர்!
லிங்குசாமி இயக்கும் அஞ்சான் படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் பாலிவுட் நடிகை கரீனா கபூர்.
சூர்யா - சமந்தா ஜோடியாக நடிக்கும் அஞ்சான் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் படம் இது.

சிதரங்கதா சிங்
இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை சித்ரங்கதா சிங் ஒரு குத்தாட்டப் பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

கரீனா
இப்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையான கரீனா கபூரும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கப் போகிறார். கரீனா கபூர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியிலும்...
இந்தப் படத்தை இந்தியிலும் வெளியிட லிங்குசாமி முயற்சிக்கிறார். இரண்டு பாலிவுட் ஹீரோயின்கள் இருப்பது அதற்கு மேலும் உதவும் என நம்புகிறார்.

சந்தோஷ் சிவன்
படத்தின் ஒளிப்பதிவை சந்தோஷ் சிவன் கவனிக்கிறார். அவரது ஒளிப்பதிவு சிறப்பான ஒன்றுதான் என்றாலும், இனம் ஏற்படுத்தியுள்ள அவப்பெயர் இந்தப் படத்துக்கே மைனஸாக அமைந்துவிடுமோ என படக்குழுவினர் அஞ்சுகின்றனர்.


Click it and Unblock the Notifications











