கரீனா கபூருக்கே ஆடிஷன்.. ஆமிர்கான் டெடிகேஷன் வேற லெவல்!
ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ’ஃபாரஸ்ட் கம்ப்’ திரைப்படத்தை பாலிவுட்டில் ’லால் சிங் சத்தா’ எனும் தலைப்பில் ரீமேக் செய்து நடித்து வருகிறார் ஆமிர் கான். இந்த படத்தில் நடிக்க நடிகை கரீனா கபூருக்கு ஆடிஷன் நடத்த
மும்பை: 3 இடியட்ஸ் படத்திற்கு பிறகு மீண்டும் ஆமிர்கானுடன் கரீனா கபூர் இணைந்துள்ளார்.
ஆஸ்கர் விருதுகளை அள்ளிய 'ஃபாரஸ்ட் கம்ப்' திரைப்படத்தின் ரீமேக்காக உருவாகும் 'லால் சிங் சத்தா' படத்தில் தான் இவர்கள் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தில் நடிப்பதற்காக கரீனா கபூருக்கு ஆடிஷன் நடத்தப்பட்ட சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பாலிவுட் குயின்
சுமார் 19 ஆண்டுகளாக பாலிவுட்டில் முன்னணி நாயகியாக நடித்து வருகிறார் கரீனா கபூர். பாலிவுட்டின் முன்னணி கான் நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ள கரீனா கபூர், பல இளம் நடிகர்களுடனும் நடித்துள்ளார். தனது நடிப்புக்காக பாலிவுட்டில் இதுவரை 81 விருதுகளுக்கும் மேல் வாங்கியுள்ளார். இவர் நடிப்பில் வெளியான 3 இடியட்ஸ், ஜேப் வி மெட், ரெப்யூஜி, ஓம்காரா உள்ளிட்ட பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளன.

ஃபாரஸ்ட் கம்ப்
ராபர்ட் ஜெமிக்ஸ் இயக்கத்தில் 1994ம் ஆண்டு டாம் ஹான்க்ஸ் நடிப்பில் வெளியான படம் Forrest Gump. சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் உள்ளிட்ட 6 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது. இந்த படத்தின் ரீமேக் உரிமையை பெற்றுள்ள நடிகர் ஆமிர்கான், லால் சிங் சத்தா என்ற பெயரில் இந்த படத்தை ரீமேக் செய்து வருகிறார்.

ஆடிஷன்:
லால் சிங் சத்தா படத்தில் நாயகியாக நடித்து வரும் கரீனா கபூர், இந்த படத்திற்காக ஆடிஷன் செய்யப்பட்டார் என்ற சுவாரஸ்ய தகவல் தற்போது லீக் ஆகியுள்ளது.
முதலில் தனது ஸ்டார் டாம் அந்தஸ்த்தை சுட்டிக் காட்டி கரீனா கபூர், ஆடிஷனுக்கு வர மறுத்ததாகவும், பின்னர், கரீனாவின் கணவரும் நடிகருமான சைஃப் அலி கான், ஹாலிவுட்டின் பிரபல நடிகர் அல்பசினோவே, ஒரு படத்திற்கு ஆடிஷன் செய்யப்பட்டார் என்ற தகவலை சொல்லி சம்மதிக்க வைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கரீனா கபூரை படத்தில் வரும் ஒரு வசனத்தை கொடுத்து பேச வைத்து அது கச்சிதமாக வந்த பின்னரே கரீனாவை இந்த படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளார் ஆமிர்கான்.

அந்த காட்சி
ஹாலிவுட் படமான ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படத்தில், பாரில் ஆடைகளின்றி வெறும் கிட்டாரால் உடலை மறைத்தபடி நாயகி பாடும் பாடல் காட்சி மிகவும் பிரபலமானது. கரீனா கபூர் நடித்து வரும் ஃபாரஸ்ட் கம்ப் படத்தில் அந்த காட்சி இடம்பெறுமா என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
தமிழ் நடிகர்கள்
அத்வைத் சந்திரன் இயக்கத்தில் 2020ம் ஆண்டு வெளியாகவுள்ள லால் சிங் சத்தா படத்தில் முக்கியமான வேடத்தில் விஜய்சேதுபதி மற்றும் யோகிபாபு நடித்து வருகின்றனர். விரைவில், அவர்கள் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்சேதுபதி மற்றும் யோகிபாபுவின் நடிப்பு ஆமிர்கானுக்கு பிடித்து போகவே பாலிவுட்டுக்கு அழைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











