'யார் கண்ணிலும் படாத இடத்துக்கு போய்டுவேன்' - நடிகையின் சீக்ரெட் பிளான்!
Recommended Video

மும்பை: பாலிவுட் நடிகை கரீனா கபூர் சயீப் அலிகானை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்துக்குப் பின்னும் பல படங்களில் நடித்து வருகிறார்.
ஓய்வில்லாத ஷூட்டிங், கரீனாவை ரொம்பவே டயர்டாக்கி விட்டதாம். இதனால், புதிய திட்டம் ஒன்றைச் செயல்படுத்த இருக்கிறார் கரீனா.
விடுமுறையை கழிக்க யார் கண்ணிலும் தென்படாத இடத்துக்குச் செல்லவுள்ளேன் என்று நடிகை கரீனா கபூர் கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகை
பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் சயீப் அலிகானை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்துக்குப் பின்னும் பல படங்களில் நடித்தார். கர்ப்பமடைந்த பின் சிறிது காலம் நடிப்புக்கு ஓய்வு கொடுத்து வந்தார்.

ஓய்வில்லாத நடிப்பு
கொஞ்ச நாள் கேப் விட்டவர் பின்னர் குழந்தை பிறந்ததும், நடிப்பில் மீண்டும் முழு கவனம் செலுத்தினார். ஓய்வில்லாத நடிப்பும், வெளிப்புற படப்பிடிப்பும், கரீனாவை ரொம்பவே களைப்பாக்கி இருக்கிறது.

கோடை விடுமுறை
தற்போது, அவர் 'வீர் தி வெட்டிங்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் விடுமுறையை கழிக்க, கணவர் சயீப் அலி கான், மகன் தைமூருடன் வெளிநாட்டுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார் கரீனா கபூர்.

தற்போது லண்டனில்
ஷூட்டிங்குக்கு இடையே, லண்டனுக்கு சென்றிருக்கிறார் கரீனா. அங்கு இயக்குநர் கரண் ஜோஹர் மற்றும் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை போட்டோகிராஃபர் சமூக வலைதளத்தில் ஷேர் செய்துள்ளார்.

யார் கண்ணிலும் படாமல்
சுற்றுலா திட்டம் குறித்து கரீனா, "அடுத்த ஒரு மாதத்துக்கு, என்னை இந்தியாவில் எங்கும் பார்க்க முடியாது. வெளிநாட்டிலும், யார் கண்ணிலும் தென்படாத ஓர் இடத்தில் கணவர், குழந்தையுடன், விடுமுறையை கழிக்கப் போகிறேன்'" எனக் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











