'நோ மீன்ஸ் நோ'.. போட்டோகிராப்பர்களிடம் கோபப்பட்ட பிரபல நடிகையின் மகன்.. வைரலாகும் வீடியோ!

Recommended Video

kareena kapoor son Taimur screams 'No' to paparazzi

மும்பை: நடிகை கரீனா கபூரின் மகன் ஒளிப்பதிவாளர்களை பார்த்து ஆக்ரோஷமாக கத்தும் வீடியோ வைரலாகியுள்ளது.

ஊடகத் துறையைச் சேர்ந்த புகைப்பட மற்றும் வீடியோ கலைஞர்கள், சினிமா பிரபலங்கள் எங்கு சென்றாலும் அவர்களை பின்தொடர்ந்து சென்று புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதை தான் பாபரசி கலாச்சாரம் என அழைப்பார்கள். இந்த பாபரசி கலாச்சாரம் பாலிவுட்டில் மிகவும் அதிகம்.

Kareena Kapoor’s son Taimur screams ‘no’ at paparazzi

ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன், ஷாருக்கான் - கவுரி உள்ளிட்ட பிரபல நட்சத்திர ஜோடிகளின் வாரிசுகள் இந்த பாபரசி கலாச்சாரத்தால் அவ்வப்போது பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதில் தற்போது பிரபல பாலிவுட் நட்சத்திர ஜோடியான கரீனா கபூர் - சைப் அலி கானின் மகன் தைமூர் பாதிக்கப்பட்டுள்ளான்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகையையொட்டி தனது சகோதரி கரிஷ்மா கபூரின் வீட்டிற்கு, தைமூருடன் கரீனா சென்றார். பின்னர் அவர்கள் வீடு திரும்புவதற்காக காரில் ஏற நடந்து வந்தனர். கரீனாவின் கையை பிடித்தப்படி தைமூரும் நடந்து வந்தான்.

போஸ் கொடுக்க வைப்பதற்காக தைமூரின் பெயரை சொல்லி புகைப்பட கலைஞர்கள் அழைத்தனர். அப்போது கோபமடைந்த தைமூர் 'நோ' என கத்தினான். அவனது தலையில் கை வைத்து கரீனா சமாதானம் செய்தார். ஹேப்பி தீபாவளி சொல்லும்படி அவனுக்கு அறிவுறுத்தினார். ஆனாலும் கோபம் குறையாத தைமூர் மீண்டும் நோ என கத்தினான். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

தைமூரின் பல பாபரசி வீடியோக்கள் ஏற்கனவே இணையத்தில் வைரலாகி இருக்கின்றன. சமீபத்தில் கூட நடிகை இஷா தியோலின் மகள் பிறந்தநாள் விழாவுக்கு வந்த போது போட்டோகிராப்பர்களை நோக்கி 'எக்ஸ்க்யூஸ்மி' என தைமூர் சொல்லும் வீடியோ வைரலானது.

அதேபோல் சில தினங்களுக்கு முன் போட்டோகிராப்பர்களுக்கு தைமூர் ஹாய் சொன்ன வீடியோவும், தன்னை டிம் என அழைக்கும்படி தைமூர் கூறிய வீடியோவும் வைரலானது. புகைப்பட கலைஞர்களுக்கு எப்போதும் ஒத்துழைப்பு கொடுத்து வந்த தைமூர் திடீரென அவர்களிடம் கோபப்பட்டது ஆச்சரியமாக இருக்கிறது என போட்டோகிராப்பர்கள் பேசிக்கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X