திரைத் துளி
மும்பையில் இருந்து கோடம்பாக்கத்தில் தொபுக்கடீர் என்று வந்திறங்கியிருக்கிறார் கரீஷ்மா.
தமிழுக்கு புதுமுகம் என்றாலும்சில இந்தி சினிமாக்களில் தலை காட்டியவராம். மும்பை பார்ட்டிசர்க்கிள்களும் பிரபலமானவர் என்கிறார்கள்.
பரிதி என்ற படத்தில் இவருடன் நடிக்கப் போவது விக்னேஷ்.
புதுநெல்லு புது நாத்து படத்தில் அறிமுகமாகி, ராமன் அப்துல்லாவில் நல்ல பெயர் வாங்கியவிக்னேசுக்கு இதுவரை பிரேக் தான் கிடைக்கவில்லை.
சூரி படத்தில் மொட்டையெல்லாம் போட்டி கெட்-அப்பை மாற்றி நன்றாகவும் நடித்து அதற்காகமிகவும் பாராட்டப்பட்டாலும் அடுத்து வாய்ப்புக்கள் வரவில்லை. இதனால் நொந்து போயிருந்தவிக்னேசுக்கு தெம்பூட்டும் வகையில் கிடைத்திருக்கிறது ஒரு சான்ஸ்.
பரிதி என்ற இந்தப் படத்தில் இவருக்கு முரட்டுத்தனமான கேரக்டராம்.
இவருடன் நடிக்க மற்றும்காட்டோ காட்டு என்று காட்டத்தான் அழைத்து வரப்பட்டிருக்கிறார் கரீஷ்மா.
அருணாச்சலேஸ்வரர் பிலிம்ஸ் என்ற புதிய நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் இது. கரீஷ்மாவைத்தவிர தாரணி என்ற புதுமுகமும் அறிமுகமாகும் இந்தப் படத்தை இயக்குவது ஓம் பிரணவ் என்றபுதுமுக டைரக்டர்.
தாதாவான அண்ணனுக்கு உதவும் தம்பி என்றரீதியில் கதை போகிறதாம்.
இதனால் படம் பூராவும்அடிதடி, வெட்டு குத்தாம். கூடவே கவர்ச்சி இடி மின்னலும் இருக்குமாம்.
படப்பிடிப்பு தமிழகத்தில் நடந்தாலும் பாடல் காட்சிகளுக்கு வழக்கம்போல் வெளிநாட்டுக்குப்போகப் போகிறார்கள்.
ஆகஸ்ட் மாதம் வெளிவர இருக்கும் இந்தப் படத்தில் அதிகம் பேசப்பட இருப்பது எது என்பதுகரீஷ்மாவின் ஸ்டில்களைப் பார்த்தால் மிக நன்றாகவே புரிகிறது.!


Click it and Unblock the Notifications











