வெட்கமே இல்லையா? வேற லெவல் கிளாமரில் பிக்பாஸ் நடிகை.. சரமாரியாக வெளுத்து வாங்கும் நெட்டிசன்ஸ்!

By

மும்பை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள புகைப்படங்களை நெட்டிசன்கள் சரமாரியாக விளாசியுள்ளனர்.

Recommended Video

கொரோனா விழிப்புணர்வு விளம்பரங்கள் | DIRECTOR E V GANESH CHAT | FILMIBEAT TAMIL

லாக்டவுன் காரணமாக நடிகர், நடிகைகள் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கின்றனர்.

பல்வேறு பிரச்னைகளுக்கு கருத்துச் சொல்வதையும் ரசிகர்களுடன் பேசுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

கொரோனா தாக்கம்

கொரோனா தாக்கம்

அவர்களுக்கும் பொழுதுபோக வேண்டாமா? கொரோனா வைரஸ் பரவல் எப்போது முடியும் என்று தெரியவில்லை. இதனால் சினிமா படப்பிடிப்புகளுக்கு விதிக்கப்பட்டுள்ள முழுக் கட்டுப்பாடும் எப்போது தளர்த்தப்படும் என்ற தகவலும் இப்போதில்லை. தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளதால், சினிமா தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் சினிமா துறையினர் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர்.

நடனம், எக்சர்சைஸ்

நடனம், எக்சர்சைஸ்

இதனால், பல நடிகைகள் தங்களது புகைப்படங்கள் மற்றும் த்ரோபேக் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றுவதை வழக்கமாக வைத்துள்ளனர். சிலர், வீட்டில் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை வீடியோவாக வெளியிடுகின்றனர். சிலர் நடனம், யோகா, எக்சர்சைஸ் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இதற்கு கிடைக்கும் லைக்ஸ் மற்றும் கமென்ட்களை ரசித்து வருகின்றனர்.

கரிஷ்மாக் தன்னா

கரிஷ்மாக் தன்னா

அடிக்கடி இன்ஸ்டாவில் போட்டோ பதிவிடும் நடிகைகளில் ஒருவர் பிரபல இந்தி நடிகை கரிஷ்மாக் தன்னா. முன்னாள் மாடலான இவர் அக்‌ஷய்குமார், பாபி தியோல் நடித்த தோஸ்தி: பிரண்ட்ஸ் பாரெவர் என்ற இந்தி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். பிறகு ரிதேஷ் தேஷ்முக், விவேக் ஓபராய் நடித்த கிராண்ட் மஸ்தி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சஞ்சய் தத்தின் வாழ்க்கை கதையான சஞ்சுவில் நடித்திருந்தார்.

காதலில் விழுந்தார்

காதலில் விழுந்தார்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, நடிகர் உபேன் படேலுடன் காதலில் விழுந்தார். இருவரும் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். பிறகு 2016 ஆம் ஆண்டு பிரிந்துவிட்டனர். இப்போது டிவி சீரியல்களிலும் நடித்து வரும் நாகினி 3 சீசனிலும் நடித்திருந்தார். இவர், இப்போது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படம் வைரலாகி வருகிறது.

கிளாமர் புகைப்படங்கள்

கிளாமர் புகைப்படங்கள்

வெள்ளை உடையில் செம கிளாமராக உடையணிந்துள்ள அந்த புகைப்படங்களை லட்சக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர். இதை பலர் பாராட்டியுள்ளனர். ஒருவர், நீங்கள் சிறந்த நடிகை. ஆனாலும் நல்ல பட வாய்ப்பு கிடைக்கவில்லை. பெரிய பட்ஜெட் படத்துல உங்களை பார்க்க ஆசைப்படறோம் என்று தெரிவித்துள்ளார். சிலர் அவர் அழகை வர்ணித்துள்ளனர்.

வெட்கமா இல்லையா?

வெட்கமா இல்லையா?

இருந்தாலும் சில நெட்டிசன்கள், இந்தப் புகைப்படங்களை கண்டபடி திட்டியுள்ளனர். இப்படி உடலை காண்பித்தபடி டிரெஸ் அணிந்து, போட்டோ எடுக்க வெட்கமா இல்லையா? என்று சிலர் சாடியுள்ளனர். ஒருவர், இப்படி போஸ் கொடுக்கறதால என்னதான் கிடைக்குது உங்களுக்கு? என்று விளாசியுள்ளார். இருந்தாலும் இந்த புகைப்படங்கள், இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X