முன்னாள் கணவருடன் இணைந்து மகளின் நடனத்தை ரசித்த கரீஷ்மா கபூர்
மும்பை: தனது முன்னாள் கணவர் சஞ்சய் கபூருடன் இணைந்து தனது மகள் சமைராவின் நடன நிகழ்ச்சியைப் பார்த்து ரசித்துள்ளார் முன்னாள் நடிகை கரீஷ்மா கபூர்.
கரீனாவின் அக்காள்தான் கரீஷ்மா. இவரும் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய் கபூரும் மணந்து கொண்டனர்.
ஆனால் காலத்தின் கோலமாக இருவரும் விவாகரத்து பெற்றுப் பிரிந்து விட்டனர்.

மகளின் நடன நிகழ்ச்சி:
இந்த நிலையில் இவர்களின் மகள் சமைராவின் நடன நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. பிரபல நடன மாஸ்டர் ஷியாமக் தாவர் நடத்திய டான்ஸ் ஷோவில் பங்கேற்று ஆடினார் சமைரா.

இணைந்து ரசித்த தம்பதி:
இதை கரீஷ்மாவும், சஞ்சய் கபூரும் இணைந்து பார்த்து ரசித்தனர். மகளுடன் ஆர்வமாக பேசியபடி காணப்பட்டார் கரீஷ்மா. அவர்களது பேச்சை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார் சஞ்சய் கபூர்.

பிரிந்த ஜோடி:
முன்னதாக கரீஷ்மா, சஞ்சய் இடையே சமரசம் ஏற்படுத்த, தங்கை கரீனா கபூரின் கணவரான நடிகர் சைப் அலிகான் கடுமையாக முயன்றார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் கரீஷ்மாவும் கபூரும் பிரிந்தனர்.

பிரபலமான கரீஷ்மா:
இருவருக்கும் கடந்த 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி திருமணம் நடந்தது. அப்போது கரீஷ்மா பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். திருமணத்திற்குப் பின்னர் நடிப்பை விட்டு விட்டார். சமைரா 2005 ஆம் ஆண்டு பிறந்தார். அதன் பின்னர் தான் தம்பதிகளுக்குள் விரிசல் ஏற்பட்டது.

தம்பதியின் நிரந்தரப் பிரிவு:
இடையில் இருவரும் பிரிந்தனர். பின்னர் மீண்டும் இணைந்தனர். மீண்டும் சந்தோஷம் துளிர்த்தது. இதன் விளைவாக 2010 ஆம் ஆண்டு மகன் கியான் ராஜ் கபூர் பிறந்தான். அதன் பின்னர் மீ்ண்டும் பிரிவு ஏற்பட்டது. இது தற்போது நிரந்தரப் பிரிவாகி விட்டது.

பிள்ளைகளுடன் வாசம்:
2012 ஆம் ஆண்டு கரீஷ்மா மீண்டும் நடிக்க வந்தார். அவர் நடித்த டேஞ்சரஸ் இஷ்க் படம் தோல்வியைச் சந்தித்தது. தற்போது தனது பிள்ளைகளுடன் வசித்து வரும் கரீஷ்மா அவ்வப்போது பார்ட்டிகளுக்கும், சினிமா, நடன நிகழ்ச்சிகளுக்கும் போய் வந்து கொண்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











