திரையரங்குகள் மூடப்பட்டதால்… கர்ணன் வசூல் பாதிப்பா?

சென்னை : திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் கர்ணன் வசூல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஏப்ரல் 9ந் தேதி வெளியானத் திரைப்படத்தை தனுஷ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது.

மேலும், தனுஷ் படத்துக்கு இதுவரை இல்லாத வசூல் முதல் நாளிலேயே கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வியாபாரரீதியாகவும் விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்ற கர்ணன் படம். பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து தனுஷை வைத்து கர்ணன் படத்தை எடுத்திருந்தார் மாரி செல்வராஜ். கொடியன்குளம் பக்கத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து கர்ணன் திரைப்படம் உருவாக்கப்பட்டது.

பிளாக்பஸ்டர் வெற்றி

பிளாக்பஸ்டர் வெற்றி

படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றாலும் சாதிப் பிரச்சினைகளை தூண்டும் வகையில் கர்ணன் திரைப்படம் அமைந்திருப்பதாக பல கருத்துக்கள் வெளியானது. இருந்தாலும் அதையெல்லாம் மீறி படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்று ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்து அனைவரின் பாராட்டையும் பெற்றது.

42 கோடி வசூல்

42 கோடி வசூல்

தமிழ்நாட்டில் 21 கோடிக்கு விற்கப்பட்ட கர்ணன் திரைப்படம் தற்போது வரை 42 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும், அதுமட்டுமில்லாமல் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் 6 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் அமேசான் தளத்தில் கர்ணன் திரைப்படம் 8 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெரிய வசூல்

பெரிய வசூல்

கர்ணன் திரைப்படம் வெளியான முதல்நாள் மட்டும்தான் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதி இருந்தது நிலையில், அடுத்த நாள் வெறும் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே வைத்துக்கொண்டு தனுஷ் படம் இவ்வளவு பெரிய வசூலை வாரி குவித்திருப்பது நாளுக்கு நாள் அவரது சினிமா மார்க்கெட் உயர்ந்து கொண்டே செல்கிறது என்பதை குறிப்பிட்டுக் காட்டுகிறது.

Recommended Video

Karnan Dhanush ன் அக்கா Lakshmi Priya யார்? முழு விவரங்கள் | Nandan, Lakshmi
வசூல் பாதிப்பு ?

வசூல் பாதிப்பு ?

இப்போது திரையரங்குகள் முற்றிலும் மூடப்பட்டுள்ளதால், அதன் எஞ்சிய வசூல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், கர்ணன் படத்தின் லாபத்தில்தான் சிறிது குறைந்துள்ளதாகவும் , கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் அளவுக்கு தாணுவுக்கு லாபம் கிடைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X