அப்போ ரகுல் ப்ரீத் சிங்.. கர்ணம் மல்லேஸ்வரி பயோபிக்கில் நடிக்க வித்யா பாலனுடன் பேச்சுவார்த்தை ?

சென்னை: பளு தூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியின் பயோபிக்கில் நடிக்க நடிகை வித்யா பாலனிடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம்.

Recommended Video

தலைவி படத்தில் வித்யா பாலனை நடிக்க வைக்க விரும்பிய இயக்குநர் ஏ.எல். விஜய்- வீடியோ

கடந்த 2000ம் ஆண்டு இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் முதல் பதக்கம் வென்று தந்த பெருமைக்கு சொந்தக்காரர் கர்ணம் மல்லேஸ்வரி.

ஆந்திராவை சேர்ந்த அந்த வீராங்கனையின் கதையை தயாரிப்பாளர் கோனா வெங்கட் தயாரிக்க முன் வந்துள்ளார்.

வீராங்கனைகளின் வரலாறு

வீராங்கனைகளின் வரலாறு

தோனி, கபில்தேவ் போன்ற கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை படமாக மாறி வரும் நிலையில், விளையாட்டில் சாதனை படைக்கும் வீராங்கனைகளின் வாழ்க்கை வரலாறும் படமாக உருவாகி வருகிறது. சாய்னா நேவால், மிதாலி ராஜ், மேரி கோம் படங்களை தொடர்ந்து கர்ணம் மல்லேஸ்வரியின் பயோபிக்கும் படமாக போகிறது.

பிறந்தநாளை முன்னிட்டு

பிறந்தநாளை முன்னிட்டு

கடந்த ஜூன் 1ம் தேதி தனது 45வது பிறந்தநாளை கர்ணம் மல்லேஸ்வரி கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது பயோபிக் படத்தை உருவாக்கப் போவதாக பிரபல திரைக்கதை ஆசிரியரும் தயாரிப்பாளரும் ஆன கோனா வெங்கட் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும், இந்த படத்தை ராஜு காடு படத்தை இயக்கிய சஞ்சனா ரெட்டி இயக்குவார் என்பதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

எந்த நடிகை

எந்த நடிகை

கர்ணம் மல்லேஸ்வரி பயோபிக் குறித்த அறிவிப்பு வந்த உடன் எந்த நடிகை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்படுவார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. தெலுங்கு படம் என்பதால், தென்னிந்திய நடிகை ஒருவரே இந்த படத்தில் லீடு ரோலில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. நயன்தாரா, அனுஷ்கா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட நடிகைகளின் பெயர்கள் அடிபட்டன.

உடற்பயிற்சி முக்கியமாச்சே

உடற்பயிற்சி முக்கியமாச்சே

தென்னிந்திய நடிகைகளில் அதிக அளவில் உடற்பயிற்சி மீது ஆர்வம் கொண்டிருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தான் சரியான தேர்வு என்ற தகவலும் வலம் வந்தன. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒர்க்கவுட் செய்யும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வரும் தான் மல்லேஸ்வரியாக நடிக்கப் போகிறார் என்ற தகவலும் வைரலாகின.

வித்யா பாலனுடன் பேச்சுவார்த்தை

வித்யா பாலனுடன் பேச்சுவார்த்தை

ஆனால், படத்தின் தயாரிப்பாளர் கோனா வெங்கட் தரப்பு, இந்த படத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலனை கர்ணம் மல்லேஸ்வரி ரோலில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை செய்து வருவதாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. சில்க் ஸ்மிதா, சகுந்தலா தேவி என பயோபிக் படங்கள் என்றாலே நடிப்பில் பின்னி எடுக்கும் வித்யா பாலன் இந்த படத்திற்காக தேர்வு செய்யப்படுவாரா? அவர் சம்மதம் தெரிவிப்பாரா? இல்லையா? என்பது சீக்கிரமே தெரிந்து விடும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X