வெளியானது கர்ணன் படத்தின் அடுத்த பாடல் குறித்த அப்டேட்!
சென்னை: தனுஷ் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளிவரவுள்ள படம் கர்ணன்.
இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கலைப்புலி தாணு தயாரித்துள்ளார்.
இந்த படத்தின் முதல் 2 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

பட்டி தொட்டி எங்கும்
கர்ணன் படக்குழு முதலில் "கண்டா வரச்சொல்லுங்க" எனும் பாடலை வெளியிட்டது. மாரி செல்வராஜ் வரிகளில், கிடக்குழி மாரியம்மாள், சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பாடிய இந்த பாடல் வேற லெவலில் வைரலாகி பட்டி தொட்டி எங்கும் ஒலித்து கொண்டிருக்கிறது.

தென்னிசை தென்றல்
அதைத்தொடர்ந்து கர்ணன் படக்குழு "பண்டாரத்தி புராணம்" எனும் பாடலை வெளியிட்டது. யுக பாரதி வரிகளில் தேனிசை தென்றல் தேவா பாடிய இந்த பாடல் பெரிய வரவேற்பை பெற்று வைரலாகியது. சந்தோஷ் நாராயணனின் இசை பெரிதும் பாராட்டப்பட்டது.

பெரிய எதிர்பார்ப்பு
முதல் 2 பாடல்களும் பெரிதும் பாராட்டப்பட்டு நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ரசிகர்கள் மத்தியில் அடுத்த பாடலின் மேல் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.
மூன்றாம் பாடலான "திரௌபதையின் முத்தம்" பாடலை படக்குழு நாளை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஏப்ரல் வெளியீடு
ஏப்ரல் 9ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், டீசர் குறித்த எந்த அறிவிப்பும் இது வரை வெளியாகாமல் உள்ளது. இந்த மாத இறுதிக்குள் படத்தின் டீசர் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











