கர்ணன் படத்தின் 4வது பாடல்…உட்ராதீங்க எப்போவ் வெளியானது!
சென்னை : தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தின் 4வது பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் மொத்தம் 4 பாடல்கள் இதில் ஏற்கனவே 3 பாடல்கள் வெளியாகி விட்டது. தற்போது 4வது பாடலும் வெளியாகி உள்ளது.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல்9ந் தேதி வெளியாக உள்ளது.

நல்ல வரவேற்பு
பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் கர்ணன். இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இப்படத்தின் 3 பாடல்களும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது 4வது பாடலான உட்ராதீங்க எப்போவ் என்ற பாடல் வெளியாகி உள்ளது.

3 பாடல்களும் ஹிட்
கர்ணன் படத்தின் முதல் பாடலான கண்டா வர சொல்லுங்க பாடல் இணையத்தில் பெரும் டிரெங்கிங்காக இருந்தது. அதே போல, மஞ்சனத்தி புராணம் பாடல் அழகான கிராமத்து மெட்டுன் அனைவரும் விரும்பும் பாடலாக அமைந்தது. மூன்றாவது பாடலான திரௌபதி முத்தம் பாடல் வெளியாகி ஹிட்டடித்தன. அப்படத்தில் இருந்து வெளியான 3 பாடல்களும் ஹிட்டடித்தன.

உட்ராதீங்க எப்போவ்
அந்த படத்தில் மொத்தமே 4 பாடல்கள் தான் அதில் 3 பாடல்கள் ஏற்கனவே வெளியாகி விட்டது. 4வது பாடல் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில், 4வது பாடலான உட்ராதீங்க எப்போவ் என்ற பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த பாடலை தயாரிப்பாளர் தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இப்பாடலை யூடியூப் வீடியோவாக இல்லாமல் வெறும் மியூசிக்காக மட்டும் இணையத்தில் வெளியாகி உள்ளது.

நிச்சயம் ஹிட்டாகும்
4வது பாடலை தனுஷின் ராசியான பாடகி ரௌடி பேபி புகழ் தீ பாடி உள்ளார். ரௌடி பேபி பாடலைப்போல இந்த பாடலும் நிச்சயம் ஹிட்டடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்ணன் திரைப்படம் வரும் ஏப்ரல்9ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











