தி நியூயார்க் டைம்ஸ் பட்டியலில் “கர்ணன்“… மகிழ்ச்சியில் தனுஷ் ரசிகர்கள் !

சென்னை : நீயூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் சிறந்த ஐந்து சர்வதேச திரைப்படப் பட்டியலில் கர்ணன் இடம் பிடித்துள்ளது.

ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகி பெரும் வசூலை வாரிக்குவித்தது.

கர்ணன் திரைப்படத்தை தயாரித்ததற்காக பெருமை கொள்வதாக தயாரிப்பாளர் தாணு கூறியுள்ளார்.

கர்ணன்

கர்ணன்

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்த திரைப்படம் கர்ணன் இப்படம் ஏப்ரல் 9ஆம் வெளியாகி பலரின் பாராட்டை பெற்றது. இத்திரைப்படத்தில் அடிப்படை வசதி இல்லாத கிராமத்தில் பேருந்து நிற்காததால், கல்வீசி தாக்க அந்த ஊரில் கலவரம் வெடிக்கிறது. அதுதொடர்பான விசாரணை நடத்த பொடியங்குளம் மக்களின் வருகிறார்போலீஸ் அதிகாரி கண்ணபிரான், அங்கு நடக்கும் செயல் போலீஸ் அதிகாரியின் ஈகோவை உரசிப் பார்க்கிறது.

அடிப்படை வசதி

அடிப்படை வசதி

இதையடுத்து, அந்த ஊரில் கலவரம் வெடிக்கிறது, அந்த ஊர் என்ன ஆனது, ராணுவத்தில் வேலை கிடைத்த நிலையில் நாயகன் என்ன முடிவெடுக்கிறார், பொடியங்குளம் கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் கிடைத்ததா, போராட்டம் முடிவுக்கு வந்ததா என பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது கர்ணன் திரைப்படம்.

ஹிட் பாடல்கள்

ஹிட் பாடல்கள்

இப்படத்தில் ரஜிஷா விஜயன், யோகி பாபு, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற கண்டா வரச்சொல்லுடா, மற்றும் திரௌபதி முத்தம், மஞ்னத்தி ஆகிய மூன்று பாடல்கள் மிகபெரிய அளவில் வெற்றி பெற்றது

பாராட்டுகள்

பாராட்டுகள்

திரையரங்கில் ஏப்ரல் 9ந் தேதி வெளியான இத்திரைப்படம் மே14ந் தேதி அமேசான் பிரைமில் வெளியாகி அனைத்து தரப்பு மக்களின் பாராட்டை பெற்றது. கர்ணன் திரைப்படத்திற்கு உலக முழுவதும் இருக்கு பல பாராட்டுகள் வந்து குவிந்தன.

கர்ணன் 4ம் இடம்

கர்ணன் 4ம் இடம்

இந்த நிலையில், அமெரிக்காவின் புகழ்மிக்க தி நியூயார்க் டைம்ஸ் ஓடிடியில் பார்க்க சிறந்த 5 சர்வதேசப் படங்களைப் பட்டியலிட்டுள்ளது. அதில், கர்ணன் 4 ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

'The Father Who Moves Mountains,

Koshien: Japan's Field of Dreams,

I Never Climbed the Provincia,

The Cloud in Her Room ஆகியவை மற்ற நான்கு படங்களாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X