பாரம்பரிய இசையுடன் கர்ணன் இசை வெளியீட்டு விழா!.. ட்ரெண்டாகும் புகைப்படங்கள்

சென்னை: தனுஷ் நடிப்பில் ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வரவுள்ள திரைப்படம் கர்ணன்.

மாரி செல்வராஜ் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தாணு தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா எளிமையாகவும் கோலாகலமாகவும் சில நிமிடங்களுக்கு முன் நடந்து முடிந்துள்ளது.

தனுஷ் இல்லாமல்

தனுஷ் இல்லாமல்

பத்திரிக்கையாளர்களுடனான ப்ரெஸ் மீட்டுடன் கர்ணன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்துள்ளது. படத்தின் நாயகன் தனுஷ் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருப்பதால் விழாவில் கலந்து கொள்ளவில்லை. இயக்குனர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகி தீ, நடிகர் யோகி பாபு, நாயகி ரஜிஸா விஜயன், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

தனுஷுக்கு புகழாரம்

தனுஷுக்கு புகழாரம்

விழாவில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், தனுஷ் & தயாரிப்பாளர் தானு இருவரும் தன்னை முழுமையாக ஆதரித்தனர் மற்றும் பாராட்டினர் என கூறியுள்ளார். பரியேறும் பெருமாள் வெளியான பத்து நாட்களுக்கு பிறகு தனுஷ் தன்னை அழைத்தார் எனவும், தனுஷை அரை மணி நேரம் சந்தித்து கதையை கூறியவுடன் உடனடியாக தனுஷ் ஒப்புக்கொண்டு, தயாரிப்பாளரிடம் பேசி படத்தை முடிவு செய்தார் எனவும் கூறியுள்ளார்.

யோகிபாபு பேச்சு

யோகிபாபு பேச்சு

விழாவின் நாயகன் சந்தோஷ் நாராயணன் பேசும் போது, இந்த தருணத்தில் தனுஷை மிகவும் மிஸ் பண்ணுவதாகவும், தனுஷ் இங்கே இருக்க வேண்டும் என விரும்பியதாகவும் கூறியுள்ளார். பரியேறும் பெருமாள் படத்தை பார்க்காமலே தனுஷ் இந்த படத்தை ஒப்பு கொண்டது குறித்து புகழ்ந்து பேசினார். தொடர்ந்து பேசிய யோகி பாபு பரியேறும் பெருமாள் படத்தை போல இந்த படத்திலும் தனக்கு வலுவான கதாப்பாத்திரம் அமைந்துள்ளது என கூறியுள்ளார்.

உட்றாதீங்க எப்போவ்

உட்றாதீங்க எப்போவ்

கண்டா வரச்சொல்லுங்க, மஞ்சனத்தி புராணம், தட்டான் தட்டான் என இதுவரை வெளியான மூன்று பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமன்றி யூ டியூப்பிலும் வைரலானது. அதை தொடர்ந்து நான்காவது பாடலான "உட்றாதீங்க எப்போவ்" பாடலை படக்குழு விழாவின் போது வெளியிட்டுள்ளது. இந்த பாடலை தீ பாடியுள்ளார். கர்ணன் திரைப்படத்தின் காலம் 2 மணிநேரம் 38நிமிடங்கள் என தெரிய வந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X