வெளிநாடுகளிலும் வசூல் சாதனை புரியும் கர்ணன்!

சென்னை : கர்ணன் வெளியாகி முதல் நாளே கிட்டத்தட்ட 10 கோடி அளவிற்கு வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.

டீசர்,பாடல்கள் என அனைத்தும் ஹிட் அடித்த நிலையில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு இருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் கர்ணன் திரைப்படம் வசூல் சாதனைகளை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சாதி பிரச்சினையை

சாதி பிரச்சினையை

பரியேறும் பெருமாள் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் மாரி செல்வராஜ் இரண்டாவது திரைப்படமான கர்ணன் தமிழகத்தில் இன்றளவும் வேரூன்றிப் போயிருக்கும் சாதி பிரச்சினையை கையில் எடுத்து அனைவரும் வாயடைத்து போகும் அளவிற்கு சொல்லியிருக்கிறது.

ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக

ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக

கொரானா பரவலால் திரையரங்குகளுக்கு மக்கள் வருவார்களா என சந்தேகத்துடன் இருந்த பலருக்கும் தரமான திரைப்படங்கள் என்றால் மக்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் திரையரங்குகளில் வந்து திரைப்படங்களைக் கண்டு மகிழ்வார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது கர்ணன். அதற்கு சான்றாக இப்பொழுது ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிநடை போட்டு வருகிறது.

முதல் நாளே

முதல் நாளே

தனுஷ், ரஜிஷா,யோகி பாபு, லால், லக்ஷ்மி கிருஷ்,கௌரி கிஷன் என பலர் நடித்திருக்க கர்ணன் வெளியான முதல் நாளே கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை புரிந்தது. தற்பொழுது வெளிநாடுகளிலும் வசூல் வேட்டையாடி வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெளிநாடுகளில்

வெளிநாடுகளில்

இந்த திரைப்படத்தின் வர்த்தக நிபுணரான தரன் ஆதர்ஷ் கர்ணன் படம் வெளிநாடுகளில் எந்த அளவிற்கு வசூலை செய்துள்ளது என்பது பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடான சிங்கப்பூரில் 50.62 லட்ச ரூபாயும், ஆஸ்திரேலியாவில் 45.25 லட்ச ரூபாயும், நியூசிலாந்தில் 5.94 லட்ச ரூபாய் வரை வசூலித்து வருவதாகவும் தொடர்ந்து மக்கள் இந்த படத்தை காண திரையரங்குகளுக்கு படையெடுத்து வந்து பெரும் ஆதரவை தந்துள்ளதாகவும் தரன் ஆதர்ஷ் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X