பண்டாரத்தி புராணம் இல்லை இனி மஞ்சனத்தி புராணம்.. வழக்கு பிரச்சனை காரணமாக.. மாறிய கர்ணன் பாட்டு!
சென்னை: பண்டாரத்தி புராணம் என கர்ணன் படத்தில் இடம்பெற்ற பாட்டு தொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், தற்போது இயக்குநர் மாரி செல்வராஜ் பாடலின் தலைப்பை மாற்றி உள்ளார்.
Recommended Video

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள கர்ணன் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.
சமீபத்தில் வெளியான கர்ணன் டீசர் யூடியூப் டிரெண்டிங்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பண்டாரத்தி புராணம்
பரியேறும் பெருமாள் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி உள்ள படம் கர்ணன். இந்த படத்தில் நடிகர் தனுஷ், ரஜிஷா விஜயன், லால், கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் இரண்டாவது பாடலாக வெளியான பண்டாரத்தி புராணம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

வழக்குப் பதிவு
பண்டாரத்தி எனும் வார்த்தையை ஒரு சமூக மக்களை காயப்படுத்தும் விதமாக உள்ளதாகக் கூறி மதுரையை சேர்ந்த புல்லட் பிரபு என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்தார். பண்டாரத்தி புராணம் பாடலை நீக்காமல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனக் கோரினார்.

மஞ்சனத்தி என மாற்றம்
வழக்கு விசாரணை கர்ணன் படக்குழுவுக்கு சாதகமாக இல்லாத சூழலில் தற்போது பண்டாரத்தி பெயரை மஞ்சனத்தி என பெயர் மாற்றம் செய்துள்ளதாக இயக்குநர் மாரி செல்வராஜ் நீண்ட விளக்க அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். யூடியூபில் இருந்தும் அந்த பாடல் சில நாட்களில் நீக்கப்பட்டு மாற்றப்படும் என்றும் கூறியுள்ளார்.

மாட வெளிச்சம்
பண்டாரத்தி புராணம் இனி மஞ்சனத்தி புராணம் என மாற்றப்பட்டு சர்ச்சைகளுக்கும், விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது என பதிவிட்டுள்ள மாரி செல்வராஜ், பெயர் மாற்றம் ஏற்படுவதால், மாட வெளிச்சத்தின் ஒளி மாறப் போகிறதா என்றும், மஞ்சனத்தி இனி கர்ணனை ஆட வைப்பாள் என்றும் தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார் மாரி செல்வராஜ்.


Click it and Unblock the Notifications











