களைகட்டும் கர்ணன் FDFS திருவிழா.. அதிகாலையிலேயே தியேட்டர்களில் குவிந்த தனுஷ் ரசிகர்கள்!

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள கர்ணன் திரைப்படம் திட்டமிட்டப்படியே இன்று (ஏப்ரல் 9) ரிலீஸ் ஆகி உள்ளது.

Recommended Video

KARNAN FDFS | Mari Selvaraj, Dhanush, Fans Celebration, Karnan Public Review

அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க திடீரென நேற்று தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.

தியேட்டர்களில் வெறும் 50 சதவீதம் இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற அதிரடி அறிவிப்பால் பின் வாங்காமல் அவன் வருவான் என ட்வீட் போட்டு இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் கலைப்புலி எஸ். தாணு கர்ணனை களமிறக்கி உள்ளனர்.

கர்ணன் புறப்பாடு

கர்ணன் புறப்பாடு

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், நட்டி நடராஜன், கெளரி கிஷன் மற்றும் யோகி பாபு நடிப்பில் உருவாகி உள்ள கர்ணன் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. அசுரன் படத்திற்கு பிறகு தனுஷின் கர்ணன் திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

அசற வைத்த டிக்கெட் புக்கிங்

அசற வைத்த டிக்கெட் புக்கிங்

இதுவரை இல்லாத அளவுக்கு தனுஷ் படத்திற்கு முதன் முறையாக வேற லெவலில் டிக்கெட் புக்கிங் நடைபெற்றதாக ஏகப்பட்ட தியேட்டர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. தனுஷின் கர்ணன் திரைப்படத்தை திரையில் காண தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களும் மிகப்பெரிய ஆர்வத்தை காட்டினர்.

திடீர் தடை

திடீர் தடை

இதுவரை 100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்கி வந்த நிலையில், நாளை (ஏப்ரல் 10) முதல் திரையரங்குகளில் வெறும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்கும் விதமாக உத்தரவிட்டுள்ளது. இதனால், கர்ணன் படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் பாதிக்கும் நிலையும் உருவாகி உள்ளது.

தியேட்டர்களில் திருவிழா

என்ன ஆனாலும், கர்ணன் வருகையை யாராலும் தடுக்க முடியாது என படத்தை இன்று ரிலீஸ் செய்துள்ளனர். அதிகாலை காட்சியாக வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படத்தை பார்ப்பதற்காக தியேட்டர்களை திருவிழாவாக மாற்றி உள்ளனர் தனுஷ் ரசிகர்கள். தனுஷின் கட் அவுட்களும் திரையரங்குகளை அலங்கரித்து வருகின்றன.

எக்ஸ்ட்ரா சேர்கள்

இன்று ஒரு நாள் மட்டும் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி உள்ள நிலையில், கர்ணன் படத்தின் முதல் நாள் வசூல் மிகப்பெரிய உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில திரையரங்குகளில் எக்ஸ்ட்ரா சேர்கள் எல்லாம் போடப்பட்டும் இன்று கர்ணன் திரைப்படம் திரையிடப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X