மாஸ்டர் ரிலீசால் தனுஷ் ரசிகர்கள் படு குஷி…காரணம் என்ன தெரியுமா?
சென்னை : மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு நேற்று அறிவித்தது.
படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தி உள்ளது.

தளபதிக்கு நன்றி
மாஸ்டர் படத்தை ரசிகர்களை விட தியேட்டர் உரிமையாளர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துள்ளனர். படத்தின் பணிகள் முடித்து 10 மாதங்களுக்கு மேலான பின்னும் திரையரங்கில் வெளியிட காத்திருந்த தளபதி விஜய்க்கு தியேட்டர் உரிமையாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

ரசிகர்கள் கொண்டாட்டம்
நீண்ட இடைவெளிக்கு பின் திரையரங்கில் ரசிகர்கள் கூட்டத்துடன் சென்று படம் பார்க்க உள்ளனர். இந்த பொங்கல் மாஸ்டர் பொங்கல் என முடிவாகியிருக்கும் நிலையில் அதை கொண்டாடும் முனைப்பில் எதிர்பார்த்து காத்துள்ளனர் தளபதி விஜய் ரசிகர்கள்.

தனுஷ் ரசிகர்கள் குஷி
மாஸ்டர் படத்தின் இடைவெளியின் போது திரையரங்கில் தனுஷ் நடிப்பில் வெளிவரவிருக்கும் கர்ணன் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிட போவதாக கர்ணன் படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்களை குஷிப் படுத்தியுள்ளது.

தனுஷின் ட்வீட்
மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவது சினிமா ரசிகர்களுக்கு நற்செய்தியாக அமைந்துள்ளதாகவும், திரையரங்கில் கிடைக்கும் அனுபவம் போல் வேறு எதுவும் இல்லை எனவும், விதிமுறைகளுக்கு உட்பட்டு பாதுகாப்பாக ரசிகர்கள் படம் பார்க்க வேண்டும் எனவும் தனுஷ் ட்வீட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











