தனுஷின் கர்ணன் ஃபஸ்ட்லுக் போஸ்டர், ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்ட கலைப்புலி எஸ்.தாணு
சென்னை : நடிகர் தனுஷ் தற்போது, பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.
Recommended Video

இப்படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் ஃபஸ்ட்லுக் போஸ்டரை இன்று காலை 11.06 மணிக்கு வெளியிட போவதாக கலைப்புலி தாணு நேற்றே தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதன் படி இன்று காலை ரிலீஸ் தேதியை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அந்த அறிவிப்பில், 2021 ம் ஆண்டு ஏப்ரல் 9 ம் தேதி கர்ணன் படம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெளியிடப்பட்டுள்ள கர்ணன் ஃபஸ்ட் லுக் போஸ்டரில் கையில் விலங்குடன், தலையில் ரத்தம் சொட்ட தனுஷ் நிற்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
முன்னதாக ஜனவரி 31 ம் தேதி ட்விட்டரில் கர்ணன் படத்தின் டீசரை கலைப்புலி தாணு வெளியிட்டிருந்தார். இந்த டீசர் இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. தொடர்ந்து கர்ணன் குறித்த அப்டேட்களை அவ்வப்போது தாணு வெளியிட்டு வருகிறார்.
கர்ணன் படத்தில் ரஜிஷா விஜயன், லட்சுமி பிரியா சந்திரமவுலி, லால், நடராஜன் சப்ரமணியன், யோகி பாபு, அழகம்பெருமாள், கவுரி ஜி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்தள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











