‘’கர்ணன்’’ முதல் பாடல் நாளை ரிலீஸ்.. கையில் வாளுடன் கெத்துக்காட்டும் தனுஷ் !
சென்னை : மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்பபடம் கர்ணன்.
இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார், சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் முதல் பாடலை படக்குழு நாளை வெளியிடவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

வீடியோ வெளியீடு
சில மாதங்களுக்கு முன்னர் கர்ணன் படக்குழு படத்திற்காக ஒரு கிராமத்தையே மிகவும் நம்பும் படியாக செட் போட்டு கலை பணியில் அசத்தி இருந்தனர். அது குறித்த வீடியோ ஒன்றையும் முன்னர் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

ரிலீஸ் தேதி அறிவிப்பு
சமீபத்தில் படக்குழு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. அத்துடன் படம் எப்போது வெளியாகும் என்ற தகவலையும் வெளியிட்ட படக்குழு. ஏப்ரல் 9 தேதி திரைப்படம் வெளியாகும் என அறிவித்து ரசிகர்களை மேலும் மெருகேற்றியது படக்குழு. இதனால், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மிகுந்த எதிர்பார்ப்பு
கொரோனா தொற்று காரணத்தால் திரையரங்குகள் முடங்கி கிடக்க தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. தனுஷின் ஜகமே தந்திரம் OTT ரிலீஸ் என கிட்டத்தட்ட உறுதியாக, கர்ணன் திரைப்படம் தனுஷ் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் படமாக அமைந்துள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையில்
இதையடுத்து படக்குழு சந்தோஷ் நாராயணன் இசையில் "கண்டா வரச்சொல்லுங்க" பாடலை நாளை இரவு 8 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. தனுஷ் வாள் ஏந்திய புகைப்படத்துடன் இந்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











