கர்ணன் மேக்கிங் வீடியோ… மாரி நீங்க வேற மாதிரி என புகழ்ந்த ரசிகர்கள் !

சென்னை : கர்ணன் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி அனைவரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

Recommended Video

Karnan Dhanush ன் அக்கா Lakshmi Priya யார்? முழு விவரங்கள் | Nandan, Lakshmi

5 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில் மாரிசெல்வராஜ் கதாபாத்திரத்துடன் ஒன்றி ஒவ்வொருவருக்கும் நடித்து காட்டி காட்சியை விளக்குகிறார்.

இணையத்தில் வெளியாகிய சிறிது நேரத்திலேயே இந்த வீடியோ பலரின் பாராட்டுக்களை பெற்று டிரெண்டிங்காகி வருகிறது.

மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இப்படத்தில், லால், மலையாள நடிகை ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தாணு தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

பலரின் பாராட்டுக்கள்

பலரின் பாராட்டுக்கள்

ஏப்ரல் 9-ம் தேதி வெளியான இப்படம், தனுஷ் நடிப்பில் இதுவரை வெளியான படங்களிலேயே அதிக வசூலைக் குவித்து சாதனை படைத்துள்ளது. 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி இருந்திருந்தால் இன்னும் அதிக வசூலைப் பெற்றிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாது திரைபிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

5 நிமிட வீடியோ

கர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி இணையத்தில் அனைவரின்கவனத்தையும் பெற்று வருகிறது. 5 நிமிடங்கள் கால அளவு கொண்ட அந்த வீடியோவில் கர்ணன் உருவான விதத்தை காட்சிகளாக விவரித்துள்ளது படக்குழு. மேலும் இயக்குநர் மாரி செல்வராஜ் நடிகர் தனுஷ் தொடங்கி தனது கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் எப்படி துல்லியமான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர்களிடம் நடித்துக் காட்டி உள்ளார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

இணையத்தில் வெளியாகி சிறிது நேரத்திலேயே அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று டிரெண்டிங்காகி உள்ளது. மேலும், மாரி செல்வராஜ் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நடிக்கும் முறையை கற்றுத் தருகிறார். இந்த மேக்கிங் வீடியோவை பார்த்த பலரும் மாரி செல்வராஜை மாரி நீங்க வெற மாதிரி என புகழ்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X