‘கண்டா வர சொல்லுங்க‘.. கர்ணன் பட நடிகை காட்டுபேச்சி முத்தம்மாளின் கண்ணீர் பதிவு!
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படத்தில், ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்துள்ளனர். அப்படத்தில் மூதாட்டி கதாபாத்திரத்தில் காட்டு பேச்சி முத்தம்மாள் என்பவர் நடித்திருந்தார். தற்போது அவர் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு வெளியானத் திரைப்படம் கர்ணன். நெல்லை மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத குக்கிராமம் பொடியங்குளம். பக்கத்து ஊர்க்காரர்கள் இவர்களை சண்டைக்கு இழுக்கின்றனர். இதனால் வெகுண்டெழும் தனுஷ் அவர்களுக்கு பாடம் புகட்டுகிறார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகிறது. கிராமத்தில் பேருந்து நிற்காததால், கல்வீசி தாக்கப்பட, கலவரம் வெடிக்கிறது. அதுதொடர்பான விசாரணையின் போது, நட்டி நட்ராஜ் ஈகோவை உரசிப் பார்க்கிறது. அதன் பின் அந்த ஊர் மக்களை நட்ராஜ் பலவிதமான கொடுமைகளை செய்கிறார். அதை எதிர்த்து தனுஷ் போராடுகிறார். அதன்பின் பொடியங்குளம் கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் கிடைத்ததா, போராட்டம் முடிவுக்கு வந்ததா என்பது தான் கர்ணன் திரைப்படத்தின் கதை.

மாரி செல்வராஜ்: சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. குறிப்பாக இப்படத்தில் இடம் பெற்ற 'கண்டா வர சொல்லுங்க' என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் டிரெண்டானது. இந்த பாடலை, கிடக்குழி மாரியம்மாள் மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இணைந்து பாடி இருந்தார்கள். இந்நிலையில், கர்ணன் படத்தில் மூதாட்டி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் காட்டு பேச்சி முத்தம்மாள். இவர் நெல்லையில் வசித்து வருகிறார். இவர் வாழ்ந்து வரும் பகுதியில் குப்பைகளை மலை போல குவித்து கிடக்கிறது. இதனால், அந்த கிராமத்தில் உள்ள மக்கள் காய்ச்சல் மற்றும் பல விதமான தொற்று நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த குப்பைகளை அகற்ற எத்தனை முறை புகார் கொடுத்தும் குப்பைகள் அகற்றப்படாததால், கர்ணன் பட நடிகை காட்டுப்பேச்சி முத்தம்மாள் கலெக்டருக்கு வேண்டுகோள் வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
கண்டா வர சொல்லுங்க: அந்த வீடியோவில், கண்டா வர சொல்லுங்க, கலெக்டரை கையோடு கூட்டி வாருங்கள். கண்டா வர சொல்லுங்க, எங்க நிலைமையை பாக்குறதுக்கு கலெக்டர் ஐயாவை கையோடு கூட்டி வாருங்கள். கண்டா வர சொல்லுங்க எங்க கொடுமையை பார்ப்பதற்கு கலெக்டர் ஐயாவை கையோடு கூட்டி வாருங்கள். இந்த குப்பையை கொட்டி கொட்டி எரித்து எங்க கண்ணெல்லாம் கண்ணீர் வடிக்கிறோம். அந்த கண்ணீருக்கு பதில் சொல்ல கலெக்டர் ஐயா இங்க வரணும் என பாட்டுப்பாடி உள்ளார்.


Click it and Unblock the Notifications











