முழு வீச்சில் கர்ணன் படத்தின் முன்பதிவு.. லாக்டவுனால் பாதகம் ஏற்படுமா!?
சென்னை: தனுஷ், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் ஏப்ரல் 9ம் தேதி வெளிவரவுள்ள திரைப்படம் கர்ணன்.
இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தாணு தயாரித்துள்ளார்.
வருகின்ற 9ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் முன்பதிவு நேற்று தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

மிக பெரிய எதிர்பார்ப்பு
இந்த ஆண்டில் வெளிவரவுள்ள படங்களில் கர்ணன் திரைப்படத்தின் மேல் மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. சில நாட்களுக்கு முன் வெளியான படத்தின் டீசர்
யூ டியூபில் 13 மில்லியன் வியூவ்ஸ்களை கடந்துள்ளது. பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்துள்ளது.

கொரோனா தொற்று
இந்நிலையில் இந்த படத்தின் முன் பதிவு நேற்று தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் படத்தின் ரிலிஸ் தேதி தள்ளி போகுமா என்ற அச்சம் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

சாதகமான புறம்
ஆனால் ரிலிஸ் தேதி குறித்து எந்த வித மாற்று கருத்தும் இல்லை என படக்குழு மீண்டும் உறுதியளித்துள்ளது. திட்டமிட்டபடி படம் வருகின்ற ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வரும் என தெரிகிறது. எந்த வித தடங்கலுமின்றி கர்ணன் படம் திரைக்கு வந்தால் ரசிகர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் சாதகமாக அமையும்.

தொடரும் சந்தேகம்
படக்குழு ஒருபுறம் உறுதியாக இருந்தாலும் கொரோனா தொற்று அதி வேகமாக பரவி வரும் இவ்வேளையில் அரசாங்கம் திரையரங்குகளில் seat occupancy குறித்து மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படி அமையுமானால் நிச்சயம் கர்ணன் திரைப்படத்திற்கு இது ஒரு பாதகமாக அமையும்.


Click it and Unblock the Notifications











