திரையரங்குகளை கைதட்டல்களால் அதிரவைக்கும் கர்ணன்!

சென்னை : நடிகர் தனுஷ் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவந்த கர்ணன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

Recommended Video

KARNAN FDFS | Mari Selvaraj, Dhanush, Fans Celebration, Karnan Public Review

அசுரன் படத்திற்கு பிறகு மீண்டும் கலைபுலி எஸ் தாணு தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது

கொரோனா இரண்டாவது அலை விதிமுறைகள் அறிவிக்கப்பட்ட போதும் குறித்த தேதியில் இன்று திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியான கர்ணன் ரசிகர்களின் கைத்தட்டல்களால் மிதக்கிறது.

செட் போட்டு அமைத்து

செட் போட்டு அமைத்து

பரியேறும் பெருமாள் என்ற பிளாக்பஸ்டர் வெற்றி திரைப் படத்தை கொடுத்த இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்து தனுஷ் நடிக்கும் கர்ணன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். கிராமத்தில் நடக்கும் கதைக்களத்தை கொண்டு உருவாகியிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக ஒரு கிராமத்தையே செட் போட்டு அமைத்து படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர்.

முக்கியமான வேடங்களில்

முக்கியமான வேடங்களில்

பிரபல இளம் மலையாள நடிகை ரஜிஷா இதில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப் படுகிறார் . மேலும் கௌரி கிஷன், யோகி பாபு மற்றும் லால் ஆகியோர் இதில் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர்.

அனைத்து பாடல்களும் வெற்றிபெற்ற

அனைத்து பாடல்களும் வெற்றிபெற்ற

கண்டா வரச்சொல்லுங்க, கர்ணன் புறப்பாடு என கர்ணன் படத்திலிருந்து வெளியிடப்பட்ட அனைத்து பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிபெற்ற நிலையில் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

 ரசிகர்களின் அமோகமான கைதட்டல்களில்

ரசிகர்களின் அமோகமான கைதட்டல்களில்


கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது தொடங்கியுள்ளதால் படம் வெளியாகுமா ஆகாதா என பலரும் குழப்பத்தில் இருக்க தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு கர்ணன் திரைப்படம் குறித்த தேதியில் கட்டாயமாக வரும் வெல்லும் வசூலை அள்ளும் என தெரிவித்திருந்தார். குறித்து வைத்தது போலவே இன்று கர்ணன் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் அமோகமான கைதட்டல்களில் நனைந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X