வாள் தூக்கி நின்னான் பாரு.. வந்து சண்டை போட எவனும் இல்ல.. வெளியானது கர்ணன் லிரிக் வீடியோ!

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் கர்ணன்.

இந்த படத்தை கலைப்புலி S. தாணு தயாரித்துள்ளார் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் முதல் பாடலை படக்குழு நேற்று இரவு வெளியிட்டது, இப்பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்து, அதற்காக பல விருதுகளையும், பாராட்டுக்களையும் குவித்தவர் மாரி செல்வராஜ். அடுத்ததாக தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கியுள்ளார், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

கிடக்குழி மாரியம்மாள்

கிடக்குழி மாரியம்மாள்

சந்தோஷ் நாராயணன் தற்போது தமிழ் சினிமாவில் வேற ஒரு லெவலில் இருக்கும் இசையமைப்பாளர். சந்தோஷ் இசையமைக்கும் ஒவ்வொரு படத்தையும் ரசிகர்கள் கவனித்து வருகின்றனர். கர்ணன் படத்தில் "கண்டா வரச்சொல்லுங்க" பாடலை கிடக்குழி மாரியம்மாள் உடன் இணைந்து பாடியுள்ளார் சந்தோஷ் நாராயணன்.

அசத்தலான இசை

அசத்தலான இசை

"கண்டா வரச்சொல்லுங்க" பாடல் தரமான வரிகளை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி சந்தோஷ் நாராயணனின் இசை கிராமிய மனம் மாறாமல் அசத்தலாக உள்ளது. பாடலில் தனுஷின் ஓவியம் மட்டுமே இருந்தாலும் சந்தோஷ் நாராயணனின் குரல், இசை ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது

பிரபலங்கள் வாழ்த்து

பிரபலங்கள் வாழ்த்து

"கண்டா வரச்சொல்லுங்க" பாடலின் லிரிக் வீடியோ நேற்று இரவு வெளியானதை தொடர்ந்து, எதிர்பார்த்ததை விட அதிகமாகவே ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமன்றி தமிழ் திரையுலக பிரபலங்களும் பாடலை பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X