கண்டா வரச் சொல்லுங்க.. இந்த பைரசி கொடுமையை அடக்க எந்த கர்ணன் வருவானோ? உலாவும் டெலிகிராம் லிங்க்!

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் ஏகப்பட்ட குறியீடுகளுடன் நடிகர் தனுஷை வைத்து இயக்கி உள்ள கர்ணன் திரைப்படம் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது.

Recommended Video

Thanu Sirஇன் தியாகம் அதிகம் | Mari Selvaraj Talk | FILMIBEAT TAMIL

அசுரன் படத்தில் செருப்பு போட்டால் அடிப்பான் என்பதை அழுத்தமாக பதிவு செய்த நிலையில், கர்ணன் படத்தில் நிமிர்ந்து பார்த்தாலே அடிப்பான் என்பதை பதிவு செய்துள்ளனர்.

மற்ற புதுப்படங்களை போல கர்ணன் படமும் ரிலீசான சில மணி நேரங்களிலேயே பைரசி தளங்களில் கசிந்து வைரலாகி வருகிறது.

கர்ணன் பைரசி

கர்ணன் பைரசி

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளியாகி முதல் ஷோ முடிந்த உடனே இந்த படத்தின் திருட்டு பிரின்ட்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சுல்தான் தயாரிப்பாளரிடமே

சுல்தான் தயாரிப்பாளரிடமே

கடந்த ஏப்ரல் 2ம் தேதி வெளியான சுல்தான் படத்தின் பைரசி டெலிகிராம் லிங்கை தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவின் ட்வீட்டுக்கு கீழே நெட்டிசன் ஒருவர் புரமோட் செய்தது மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியது. எதுவும் செய்ய முடியாது என்கிற தைரியத்தில் தொடர்ந்து இது போன்ற பைரசி வெறியாட்டம் சினிமா தயாரிப்பாளர்களை பாதித்து வருகிறது.

தயாரிப்பாளர்களும் கண்டு கொள்வதில்லை

தயாரிப்பாளர்களும் கண்டு கொள்வதில்லை

பெரிய படங்களுக்கு எதிர்பார்த்த வசூல் வருவதால் தயாரிப்பாளர்களும் இந்த திருட்டுத் தனத்தை பெரிதாக கண்டுகொள்வதில்லை என்று தான் தெரிகிறது. தியேட்டரில் பார்ப்பவர்கள் தியேட்டரில் பார்க்கட்டும், ஒடிடியில் பார்ப்பவர்கள் ஒடிடியில் பார்க்கட்டும் பைரசி பிரின்ட்டில் படம் பார்ப்பவர்களும் பார்த்து விட்டு போகட்டும் என்கிற மனநிலைக்கே வந்து விட்டனர்.

மக்கள் ஆர்வம் காட்டக் கூடாது

மக்கள் ஆர்வம் காட்டக் கூடாது

இதுபோன்ற பைரசி தளங்களுக்கு நெட்டிசன்கள் மற்றும் பொதுமக்கள் காட்டும் ஆர்வம் காரணமாகத்தான் இந்த அவல நிலை தொடர்கிறது. மக்கள் ஆர்வம் காட்டாமல் இருந்தால் மட்டுமே இந்த திருட்டுத் தனத்தை ஒழிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X