‘மஞ்சனத்தி புராணம்’ வீடியோ சாங் ரிலீஸ்… ரவுண்டு வண்டுக்கு.. ரவுண்டு வண்டுக்குனு செம ஹிட்!
சென்னை : மஞ்சனத்தி புராணம் வீடியோ பாடலை கர்ணன் படக்குழு வெளியிட்டுள்ளது.
Recommended Video
யுகபாரதியின் வரியில், தேவாவின் கம்பீரமான குரலில் பாடல் வெளியாகி உள்ளது.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். கர்ணன் படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் வெற்றி பெற்றுள்ளன

மாபெரும் வெற்றி
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படம் வரும் ஏப்ரல் மாதம் 9ம் தேதி தியேட்டரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அந்த படத்தில் மலையாள நடிகை ரஜிஷா விஜயன் தனுஷ் ஜோடியாக நடித்திருக்கிறார். யோகி பாபு, லால், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஹிட் சாங்
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளார். இதில், கண்டா வரச் சொல்லுங்க பாடல் வெளியான நாள் முதல் இன்று வரை ஹிட் பாடல்கள் வரிசையில் உள்ளன. யூடியூப்பிலும் டிரெண்டிங்கில் உள்ளது.

தட்டான் தட்டான்
கர்ணன் திரைப்படத்தின் மற்றொரு பாடலான தட்டான் தட்டான் வண்டிக்கட்டி பறந்தேன் கோழி தூவாட்டம் என்ற வீடியோ பாடல் கடந்த வாரம் வெளியானது. இந்த பாடலுக்கு யுகபாரதியின் வரியில் தனுஷ், மீனாட்சி இளையராஜா பாடியிருக்கிறார்கள்.
மஞ்சனத்தி புராணம்
தற்போது மஞ்சனத்தி புராணம் பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது . இறந்த மனைவி மீதான தன் காதலை, பிரிவின் சோகத்தை தேவாவின் கம்பீரமான குரலில் ரசிக்கும் படியாக இந்தஉள்ளது. தற்போது வெளியாகி உள்ள இந்த வீடியோ பாடல் பாராட்டுக்களை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











