twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தொடரும் எதிர்ப்புகள்.. மூன்றாவது முறையாக கர்ணன் படத்தில் செய்யப்பட்ட மாற்றம்.. தரமான சம்பவம்!

    |

    சென்னை: தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளை அடுத்து மூன்றாவது முறையாக கர்ணன் படத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    Recommended Video

    Thanu Sirஇன் தியாகம் அதிகம் | Mari Selvaraj Talk | FILMIBEAT TAMIL

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் கர்ணன். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

    விதவிதமான போஸ்… அழகால் ரசிகர்களை மிரளவைத்த சர்பேட்டா பரம்பரை நாயகி !விதவிதமான போஸ்… அழகால் ரசிகர்களை மிரளவைத்த சர்பேட்டா பரம்பரை நாயகி !

    படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களும் செம ஹிட்டாகியுள்ளது. அதேநேரத்தில் கர்ணன் படம் குறித்த சில சர்ச்சைகளும் எழுந்து வருகிறது.

    அரசியல் வட்டாரத்தில் சர்ச்சை

    அரசியல் வட்டாரத்தில் சர்ச்சை

    கொடியன்குளம் வன்முறையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில், எந்த ஆண்டு இந்த வன்முறை அரங்கேறியது என்பது குறித்து தொடர்ந்து அரசியல் வட்டாரத்திலும் சர்ச்சை எழுந்து வருகிறது.

    உதயநிதி டிவிட்

    உதயநிதி டிவிட்

    கர்ணன் திரைப்படம் கொடியன்குளம் கலவரத்தை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தை பார்த்த திமுக இளைஞரணி செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்திருந்தார்.

    1997 ஆம் ஆண்டு..

    1997 ஆம் ஆண்டு..

    மேலும் 1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது, அதனை மாற்ற வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

    மீண்டும் எதிர்ப்பு..

    மீண்டும் எதிர்ப்பு..

    உதயநிதி ஸ்டாலின் டிவிட்டை தொடர்ந்து படக்குழு படத்தில் வருடம் குறித்து வெளியிடப்படும் பகுதியை 90களின் பிற்பகுதி என்று மாற்றியது. ஆனால் அதற்கும் அரசியல் கட்சிகள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது.

    சாட்சியாக பட்டாம்பூச்சி

    சாட்சியாக பட்டாம்பூச்சி

    மேலும் அதனை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. இதனை தொடர்ந்து கர்ணன் படத்தில் மூன்றாவது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, அடிப்படை தேவைகளுக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் சாமானிய மக்கள் உயிர்ப்போடு போராடத் தொடங்கிய கால கட்டம்.. சாட்சியாக பட்டாம்பூச்சி என மாற்றப்பட்டுள்ளது.

    English summary
    Karnan movie's factual error has changed for thired time. Karnan movie directed by Mari selvaraj which is staring Dhanush.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X