ஏன் ஆளு பண்டாரத்தி.. எடுப்பான செம்பருத்தி.. வெளியானது கர்ணன் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்!
சென்னை: கர்ணன் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் வெளியாகியுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கர்ணன். இந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.
இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்கிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

திருநெல்வேலியில் செட்
திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதியில் இப்படத்திற்கு என பிரம்மாண்ட செட்டுகள் அமைக்கப்பட்டு படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. எஞ்சிய காட்சிகள் சென்னையில் காட்சியாக்கப்பட்டுள்ளது.

கண்டா வர சொல்லுங்க..
இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியான கண்டா வர சொல்லுங்க பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது.

பண்டாரத்தி புராணம்
இந்நிலையில் இரண்டாவது சிங்கிளாக பண்டாரத்தி புராணம் என்ற பாடல் வெளியாகியுள்ளது. தேனிசை தென்றல் தேவா குரலில் என் ஆளு பண்டாரத்தி.. எடுப்பான செம்பருத்தி என மெய் மறக்க செய்கிறது இந்தப் பாடல்.

5 லட்சம் வியூஸ்
இப்பாடலை யுகபாரதி எழுதியுள்ளார். வெளியான சில நிமிடங்களிலேயே 5 லட்சம் வியூஸ்களுக்கு மேல் குவித்து வைரலாகி வருகிறது. பாடலை கேட்ட ரசிகர்கள் தேவாவின் குரலில் இந்த பாடலை கேட்பது பெரும் சந்தோஷம் என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











