ஏலே மஞ்சனத்தி புருஷா... ஒரே டயலாக் தான்.... மனதில் பதிந்த முத்தம்மா பாட்டி!
சென்னை : கர்ணன் திரைப்படத்தில் அனைவரின் மனம் கவர்ந்தவர் முத்தம்மா பாட்டி.
இவர் சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில், சூர்யா, துருவ்விக்ரமுடன் நடிக்க ஆசையாக இருப்பதாக கூறியுள்ளார்.
கர்ணன் தான் என் முதல் படம், இனி நடிக்கிற படத்துல நல்ல நடிச்சி நல்ல பெயர் எடுப்பேன் என்று கூறியுள்ளார் முத்தம்மா பாட்டி.

மாரிசெல்வராஜ்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், லட்சுமிப்ரியா , கௌரி கிஷன்,யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் கர்ணன். தாணு தயாரிப்பில் வெளியாகி உள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வரன், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயண் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

அதிக வசூல் சாதனை
ஏப்ரல் 9ந் தேதி வெளியான இந்தப்படம் தனுஷ் நடிப்பில் வெளியாகி படங்களில், முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. சில வாரங்கள் திரையரங்கில் வெற்றிகரமான ஒட்டத்துக்குப்பின் தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தீவிரப்பிரவலால் திரையரங்குகள் மூடப்பட்டன. இந்நிலையில் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் மே 14ந் தேதி அன்று கர்ணன் வெளியானது.

ஏலே மஞ்சனத்தி புருஷா
திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைவரும் இந்த படத்தை வெகுவாக பாராட்டினார். இந்த படத்தில் பல சுவாரஸ்யமான காட்சிகள் இருந்த போதிலும், சமூக வலைத்தளப்பக்கத்தில் அனைவரும் விரும்பி பார்த்த காட்சி என்ன வென்றால், ஏலே...மஞ்சனத்தி புருஷா... பத்து ரூபாய் போதுமா என்ற காட்சி ரசிக்கும்படி இருந்தது.

கர்ணன் முதல் படம்
இந்த காட்சியில் நடித்த அந்த பாட்டியை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இவரின் மேற்கொண்ட பேட்டியில், இவர் முத்தம்மா என்றும் தனது 75 வயது ஆவதாகவும் கூறியுள்ளார். மேலும், பேசிய அவர், கர்ணன் திரைப்படம் தான் எனக்கு முதல் படம், இந்த காட்சியில நான் நடிக்க மிகவும் பயந்தேன் மாரிசெல்வராஜ் அவர் தான் ஆச்சி உன்னால முடியும் நீங்க நடிங்கனு சொன்னாறு என்று கூறியுள்ளார்.

வெக்கம் வெக்கமா வந்துச்சு
மேலும், அந்த ஏலே...மஞ்சனத்தி புருஷா காட்சியில அவர் முத்தம் கொடுத்ததும் அவரை பாக்கும்போது எல்லாம் ஒரே வெக்கம் வெக்கமா வந்துச்சு என்று கூறியுள்ளார். எனக்கு சூர்யா, விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இவங்ககூட நடிக்கனும்னு ஆசையா இருக்கு என்று கூறியுள்ள முத்தம்மா பாட்டி, பட வாய்ப்புகள் தேடிவருகின்றன, நல்ல நடிச்சி நல்ல பெயர் எடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











