Just In
- 4 hrs ago
தளபதி65 படத்தில் நடிக்கிறேனா? அது நடந்தா உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன்… பவித்ரா லட்சுமி பதில் !
- 4 hrs ago
அதிகரிக்கும் கொரோனா...பொன்னியின் செல்வன் சூட்டிங்கில் மாற்றம் செய்த மணிரத்னம்
- 5 hrs ago
விஜய் கையெழுத்திட்ட துண்டுச்சீட்டு...பொக்கிஷமாக பதிவிட்ட அமெரிக்க ரசிகர்
- 5 hrs ago
இப்படியா செய்வார் பிரசாந்த்...சமூக வலைதளமே அலறுதே
Don't Miss!
- Sports
ரோகித் பத்தி மோசமான கமெண்ட்... பதிவை உடனடியாக நீக்கிய ஸ்விகி... குவியும் எதிர்ப்பு
- News
திருவெறும்பூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர்.. அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கொரோனா பாஸிட்டிவ்!
- Automobiles
ஆட்டோமேட்டிக் காராகவும் தயாராகும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! சன்ரூஃப்-ஐயும் பெற்று வருகிறது...
- Finance
இந்திய பொருளாதாரம் 2021ல் 12.5 சதவீத வளர்ச்சி அடையும்..!
- Lifestyle
சூரிய பெயர்ச்சி: மேஷம் செல்லும் சூரியனால் இந்த 7 ராசிக்கு அட்டகாசமான காலமா இருக்கப் போகுது...
- Education
பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பின் வாங்காத தனுஷ்.. பட்டையை கிளப்பும் டிக்கெட் புக்கிங்.. யானை மீது ஏறி வருகிறான் கர்ணன்!
சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷின் கர்ணன் திரைப்படம் நாளை திட்டமிட்டப்படி வெளியாகிறது.
கொரோனா பரவல் மற்றும் தேர்தல் களேபரங்களுக்கு இடையே கர்ணன் வெளியாகுமா? ஆகாதா? என்கிற ஏகப்பட்ட சந்தேகங்கள் எழுந்தன.
மேலும், கர்ணன் படம் தொடர்பாக சில வழக்குகளும் போடப்பட்டு இருந்த நிலையில், அனைத்து தடைகளையும் தாண்டி யானை மீது ஏறி வருகிறான் கர்ணன்.

உரிமைப் போர்
அடிதட்டு மக்களின் வாழ்வாதார உரிமைக்காக போர் செய்யும் மனிதனின் கதையாக கர்ணன் உருவாகி உள்ளது. கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி உள்ள இந்த படத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

நாளை ரிலீஸ்
தனுஷின் கர்ணன் திரைப்படம் நாளை திட்டமிட்டப்படி திரையரங்குகளில் வெளியாகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஏகப்பட்ட படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், கர்ணன் படத்திற்கு மக்களிடையே கிடைத்துள்ள எதிர்பார்ப்பு காரணமாக பின் வாங்காமல் இந்த ரிலீஸ் முயற்சியை கர்ணன் படக்குழு எடுத்துள்ளது.

யானை மீது தனுஷ்
கர்ணன் படத்தின் டீசர் மற்றும் ப்ரமோ வீடியோக்களில் குதிரையில் வாளேந்தி தனுஷ் வரும் காட்சிகள் இடம்பிடித்து இருந்த நிலையில், தற்போது யானை மீது நடிகர் தனுஷ் கர்ணனாக மக்கள் முன்னால் பவனி வரும் புதிய போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

டிக்கெட் புக்கிங்
மாஸ்டர், சுல்தான் படங்களை தனுஷின் கர்ணன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது அனல் பறக்கும் டிக்கெட் புக்கிங்கை பார்த்தாலே தெரிகிறது. கர்ணன் படம் வெளியாக உள்ள அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக படம் ஓடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு முக்கியம்
புதிய படங்களை திரையரங்குகளில் பார்க்க மக்கள் எந்த அளவுக்கு ஆர்வம் காட்டுகிறார்களோ அதே அளவுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வுடன் அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பதும் முக்கியம். முகக்கவசத்தை முறையாக போட்டுக் கொண்டு, அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவிக் கொண்டு கர்ணனை திரையில் கண்டு ரசியுங்கள்!