ரம்ஜான் ட்ரீட்.. அமேசான் பிரைமில் வெளியானது கர்ணன்.. டிரெண்டாகும் #KarnanOnPrime
சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் ஏப்ரல் 9ம் தேதி திரையரங்குகளில் கர்ணன் படம் வெளியானது.
Recommended Video
கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில், இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அமேசான் பிரைமில் கர்ணன் படம் வெளியாகி உள்ளது.
#KarnanOnPrime என்ற ஹாஷ்டேக்கை போட்டு ரசிகர்கள் கர்ணன் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

கர்ணன் கர்ஜனை
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன், லால், யோகி பாபு, நட்டி நடராஜ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் ஏப்ரல் 9ம் தேதி வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

வசூல் பாதிப்பு
கொரோனா பரவல் காரணமாக ஏப்ரல் 10ம் தேதி முதல் திரையரங்குகள் 50 சதவீதம் இருக்கைகளுடன் மட்டுமே செயல்படும் என அரசு அறிவித்தது. மேலும், கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவ தொடங்கிய நிலையில், திரையரங்குகளும் மூடப்பட்டன. இதன் காரணமாக கர்ணன் வசூல் பெரிதளவில் பாதிப்பை சந்தித்தது.

ஒரு மாசம் ஆகிடுச்சு
நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெளியாகி 16 நாட்களிலேயே அமேசான் பிரைமில் வெளியானது. ஆனால், கர்ணன் திரைப்படம் ரிலீசாகி ஒரு மாதத்திற்கு மேல் ஆன நிலையில், இன்று ரம்ஜான் பண்டிகை ஸ்பெஷலாக கர்ணன் வெளியாகி உள்ளது.

இதயத்தில் இருந்து கூப்பிடுங்க
நம்பி கூப்பிட்டால், மக்களை காக்க கர்ணன் வருவான் என இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து, கர்ணன் அமேசான் பிரைம் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த ட்வீட்டுக்கு கீழே தனுஷ் ரசிகர்கள் பலரும், மீண்டும் தனுஷுடன் இணையவுள்ள படத்தை இதைவிட தரமான செய்கையாக செய்யுங்க இயக்குநரே என பாராட்டி வருகின்றனர்.

அமேசான் பிரைமில் கர்ணன்
தனுஷின் கர்ணன் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி உள்ள நிலையில், தனுஷ் ரசிகர்கள் கர்ணன் படத்தின் ஸ்க்ரீன் ஷாட்களையும், சின்ன க்ளிப்ஸ்களையும் எடுத்துப் போட்டு சமூகத்திற்கு தேவையான படம் இது என்றும், இது போன்ற வலிகளை பதவி செய்த மாரி செல்வராஜுக்கும் நடிப்பால் அசத்திய தனுஷுக்கும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











