எல்லாத்தையும் ஸ்பாயில் பண்ணிட்டாங்க.. அர்ஜுனரா.. கர்ணரா.. யாரு பெருசு?.. கல்கியால் வெடித்த சர்ச்சை!
சென்னை: பிராஜெக்ட் கே என படத்தை ஆரம்பித்து கல்கி என டைட்டில் வைத்த நாக் அஸ்வின் இறுதியில் வைத்த ட்விஸ்ட்டை ஒரே நாளில் நெட்டிசன்கள் சல்லி சல்லியாக உடைத்து விவாதத்தையே சோஷியல் மீடியாவில் நடத்தி வரும் அளவுக்கு கல்கி 2898 ஏடி திரைப்படம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
முதல் பாதி முழுவதும் அடுத்தவர்களிடம் இருந்து ஆட்டையைப் போடும் கதாபாத்திரத்தை பிரபாஸுக்கு கொடுத்து விட்டு கடைசியில் கிளைமேக்ஸில் கர்ண மகாபிரபுவே இவர் தான் என சந்தோஷ் நாராயணன் பிஜிஎம் மற்றும் விஎஃப்எக்ஸ் போட்டு பெரிய பில்டப்புடன் நாக் அஸ்வின் பொத்திப் பொத்தி வச்சு காட்டிய சீனை இப்படி ஸ்பாய்லர் செய்ய வச்சீட்டீங்களே என பிரபாஸ் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

கல்கி அவதாரமாக யார் நடித்திருக்கப் போகிறார் என்கிற கவலை எல்லாம் பிரபாஸ் ரசிகர்களுக்கோ கல்கி பட ரசிகர்களுக்கோ இப்போது படம் வெளியான பின்னர் இல்லாமலே போய் விட்டது. இது கல்கி திரைப்படமா? அல்லது கர்ணன் திரைப்படமா? என்கிற ரேஞ்சுக்கு தற்போது ஒட்டுமொத்த படத்தின் கதையையே மாற்றி விட்டார்கள் நெட்டிசன்கள்.
பைரவா இல்ல கர்ணன்: கல்கி படத்தின் விமர்சனத்தில் கூட பலரும் ரிவீல் செய்யாத கர்ணன் மேட்டரை வைத்து சோஷியல் மீடியாவில் கர்ணன் காட்சிகளுடன் மிகப்பெரிய விவாதத்தையே கிளப்பி விட்டனர். இயக்குநர் நாக் அஸ்வின் ஸ்பாய்லர் மற்றும் பைரசி வேண்டாம் என சொல்லியும் டோலிவுட் மற்றும் பாலிவுட் ரசிகர்கள் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் கர்ணன் அதிக சக்தியுடையவரா? அல்லது அர்ஜுனன் அதிக சக்தியுடையவரா? என்கிற விவாதம் கிளம்ப காரணமே கல்கி படத்தில் பைரவா கதாபாத்திரத்தில் நடித்த பிரபாஸ் உண்மையிலேயே கர்ணன் என ரிவீல் செய்யப்படுவது தான்.
தேருக்கு பதில் கார்: கர்ணன் என்றாலே தேரோட்டி மகன் என்கிற அடைமொழி இருக்கும். கர்ணனை தேரோட்டி எடுத்து வளர்த்து இருப்பார். அதுவே அவருக்கு அவச்சொல்லாகவும் மாறிவிடும். சிவாஜி கணேசன் நடித்த கர்ணன் படத்தை பார்த்த பலருக்கும் கர்ணன் படத்தின் கதை தெரிந்திருக்கும். அதை தாண்டி மகாபாரதம் சீரியல்களிலும் கர்ணன் யாரு என்பதை ரசிகர்கள் உணர்ந்து இருப்பார்கள். கர்ணனுக்கு தேர் என்றால் பைரவாவுக்கு கார் என்கிற ரேஞ்சில் தான் இப்படியொரு காரையே உருவாக்கி கொடுத்திருக்கிறார் நாக் அஸ்வின்.
அர்ஜுனனா? கர்ணனா?: சினிமா மற்றும் சீரியல்களில் தான் கர்ணன் மிகப்பெரிய பலம் வாய்ந்தவர் எனக் கூறப்படுகிறது. ஆனால், உண்மையில் மகாபாரதம் படித்தவர்களுக்குத் தெரியும் எந்த இடத்திலும் கர்ணன் அர்ஜுனனை விட பெரியவன் இல்லை என்றும் வியாசர் எங்கேயும் அப்படியொரு குறிப்பை எழுத வில்லை என்று கூறி விவாதம் நடைபெற்று வருகிறது. அர்ஜுனனாக இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்திருக்கிறார். அவரது காஸ்டிங்கும் சரியில்லை என்றும் ராம்சரண் தான் சரியான தேர்வு என்றும் ராம்சரண் ரசிகர்களும் பிரச்சனை செய்து வருகின்றனர். கிருஷ்ணராக மகேஷ் பாபுவை நாக் அஸ்வின் அடுத்த பார்ட்டில் கொண்டு வரவேண்டும் என மகேஷ் பாபு ரசிகர்களும் அடித்துக் கொள்கின்றனர்.
கலியுகத்தில் கர்ணன் ஏன்?: சில கொடை வள்ளல்களை கலியுக கர்ணன் என அடைமொழி கொடுத்து அழைப்பதை நாக் அஸ்வின் தப்பாக புரிந்துக் கொண்டு கல்கி படத்தில் ஏன் கர்ணனை ஹீரோவாக்கி புராணத்தையே சொதப்பி இருக்கிறார் என வெளுத்து வாங்கி வருகின்றனர். ஆதிபுருஷ் படத்திலும் இதே போல ராமாயணத்தை தப்பாக சித்தரித்து விட்டனர் என்கிற சர்ச்சை வெடித்தது குறிப்பிடத்தக்கது. இதுவெறும் சினிமா மட்டும் தான் சினிமாட்டிக் லிபர்ட்டி மூலம் தனது கற்பனை இதிகாசத்தை உருவாக்கவே நாக் அஸ்வின் முயற்சித்துள்ளார். இதை ரியல் புராணத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் குழப்பம் தான் உண்டாகும் என சினிமா பிரபலங்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











