twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரசிகர்களை அழவைத்து அனுப்பும் தனுஷ்.. பறக்கிறது கர்ணன் கொடி.. 2ம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

    |

    சென்னை: முதல் நாள் வசூல் 10.5 கோடியாக இருந்த நிலையில், கர்ணன் படத்தின் இரண்டாம் நாள் வசூலும் பல கோடிகளை தாண்டியுள்ளது.

    இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள கர்ணன் திரைப்படம் குறித்த பேச்சுத் தான் சமூக வலைதளங்கள் முழுவதும்.

    விஜய்சேதுபதி, சமுத்திரகனி என ஏகப்பட்ட பிரபலங்கள் இந்த படத்தை மிஸ் பண்ணாம பாருங்க என படத்தை பார்த்து வியந்து பாராட்டி வருகின்றனர்.

    கர்ணன் வசூல்

    கர்ணன் வசூல்

    நடிகர் தனுஷ் நடித்து இதுவரை வெளியான படங்களிலேயே இல்லாத அளவுக்கு கர்ணன் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு எழுந்துள்ளது. கர்ணன் படத்தை பார்த்த பலரும் மனம் விட்டு பாராட்டி வருகின்றனர். சமூக அக்கறை கொண்ட படமாக கர்ணன் இருப்பதாகவும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

    50 சதவீதம் மட்டுமே

    50 சதவீதம் மட்டுமே

    கர்ணன் திரைப்படம் ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸ் ஆனது. முதல் நாளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இரண்டாம் நாளான ஏப்ரல் 10 முதல் வெறும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே தியேட்டர்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், முதல் நாளை விட இரண்டாம் நாள் வசூல் பாதித்துள்ளது.

    முதல் நாள் வசூல்

    முதல் நாள் வசூல்

    தனுஷின் கர்ணன் திரைப்படம் முதல் நாளில் 10.5 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் அதிகபட்சமாக 92 லட்சம் ரூபாய் வசூலை கர்ணன் ஈட்டியுள்ளது. கேரளாவிலும் கர்ணன் படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. கர்ணன் படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு காரணமாக தொடர்ந்து படத்தை பார்க்க ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள் என தெரிகிறது.

    இரண்டாம் நாள் வசூல்

    இரண்டாம் நாள் வசூல்

    முதல் நாள் 10.5 கோடி வசூல் வந்த நிலையில், நேற்று 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளில் திரையிடப்பட்ட கர்ணன் திரைப்படம் சுமார் 6 கோடி வரை வசூல் ஈட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஞாயிற்றுக் கிழமையான இன்றும் கர்ணன் வசூல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    கூடுதல் காட்சி

    கூடுதல் காட்சி

    50 சதவீதமாக இருக்கைகள் குறைக்கப்பட்ட நிலையில், கர்ணன் படத்திற்கு கூடுதலாக ஒரு காட்சியை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், ரசிகர்கள் தொடர்ந்து டிக்கெட்டுகளை வாங்க காத்துக் கொண்டு இருப்பதால், மற்ற படங்களை நிறுத்தி வைத்து விட்டு கர்ணன் படத்திற்கு கூடுதல் காட்சிகளை பல திரையரங்குகள் ஒதுக்கி வருகின்றன.

    அழ வைத்த தனுஷ்

    அழ வைத்த தனுஷ்

    நடிகர் தனுஷின் அசத்தலான நடிப்பு மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜின் ஆழமான கதை காரணமாக தியேட்டரில் இருந்து வெளியே வரும் ரசிகர்கள், உணர்ச்சி மிகுதியில் அழுது கொண்டே வெளிவரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நிச்சயம் இந்த படமும் தனுஷுக்கு பல விருதுகளை அள்ளி கொடுக்கும் என்று பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

    English summary
    Only 50 percent occupancy allowed in TN theaters rule decreases Karnan second day box office collection. Karnan collects 4-6 crore on its second day run.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X