கர்ணன் படத்தின் அடுத்த அப்டேட்.. அசத்தலாய் அறிவித்த தனுஷ்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
சென்னை: கர்ணன் படத்தின் அப்டேட்டை அசத்தலாய் அறிவித்துள்ளார் நடிகர் தனுஷ்.
Recommended Video
மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்கிறார்.
இந்தப் படத்தை தாணு தயாரிக்கிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

எஞ்சியுள்ள காட்சிகள்
திருநெல்வேலி அருகே பிரத்யேக செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. கொரோனா காரணமாக படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டது.

கண்டா வரச் சொல்லுங்க
கர்ணன் படத்தை ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள கண்டா வரச் சொல்லுங்க பாடல் வெளியானது. இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இரண்டாவது சிங்கிள்
யூட்யூப்பிலும் லட்சக்கணக்கான வியூஸ்களை குவித்தது. இந்நிலையில் கர்ணன் படத்தில் இடம்பெற்றுள்ள மற்றொரு பாடல் விரைவில் வெளியாக உள்ளது. இதுதொடர்பான அப்டேட்டை நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

2வது சிங்கிள் போஸ்டர்
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் கர்ணன் 2வது சிங்கிள் என்று குறிப்பிட்டு நாளை வெளியாகும் என்ற போஸ்டரை ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த பாடலை கேட்க காத்திருக்கிறோம் என பதிவிட்டு வருகின்றனர்.

வேற லெவல்னா..
தனுஷின் அப்டேட்டை பார்த்த இந்த நெட்டிசன், உங்க வாய்ஸ்ல இந்த பாட்டு இருந்தா வேற லெவல்னா.. இந்த போட்டோ பார்த்தா தோன்ற டயலாக் இந்த பகுதி.. வாழ்க்கையின் இந்த சின்ன பகுதிதான் சந்தோஷம் என்றழைக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











