கர்ணன் படப்பிடிப்பு முடிந்தது.. அடுத்து புதுப்பேட்டை 2? செல்வராகவன் ட்வீட் !

சென்னை : தமிழ் நடிகர்களில் தற்போது மிகவும் பிஸியாக உள்ள நடிகர் தனுஷ். தொடர்ந்து 6,7 படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் கர்ணன் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதற்கு சில மணி நேரம் முன்பு இயக்குனர் செல்வராகவன் தனுஷுடன் பணிபுரிவதை பற்றி ஒரு ட்வீட் பதிவிட்டு இருந்தார்.

ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மகிழ்ச்சி

இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய இடத்தை பிடித்தார். பின்னர் அவர் தனுஷுடன் அடுத்த படம் இயக்க போவதாக கூறியதில் இருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒருவழியாக இன்று படப்பிடிப்பு முடிந்து உள்ளது இதையடுத்து கர்ணன் படத்தை பற்றிய அறிவிப்புகள் தொடர்ந்து வரும் என ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

உண்மை சம்பவங்களின் அடிப்படையில்

உண்மை சம்பவங்களின் அடிப்படையில்

தன்னுடைய மக்களுக்கான உரிமையை கேட்பவன் கர்ணன் எனவும் தனுஷின் கதாபாத்திரமும் அப்படிப்பட்டது தான் எனவும் மாரி செல்வராஜ் கூறியிருந்தார். கர்ணன் திரைப்படம் உயர் சாதியினருக்கும் கீழ் சாதியினருக்கும் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம் என பேச்சுக்கள் எழுந்தது. படப்பிடிப்பை நடத்த விடாமல் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் பின்பு அது முடிவுக்கு வந்தது. இதனால் இந்த படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கூடியுள்ளது.

புதுப்பேட்டை 2 எப்போ?

புதுப்பேட்டை 2 எப்போ?

தனுஷுடன் பணிபுரிவது எப்போதும் ஸ்பெஷல் தான் என செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அடுத்த சில மணி நேரங்களிலேயே தனுஷ் கர்ணன் படப்பிடிப்பு முடிந்ததை ட்விட்டரில் பதிவிட்டார். இருவரும் சொல்லி வைத்து ட்வீட் போடுவது போல் உள்ளதே. ஒரு வேளை அடுத்து புதுப்பேட்டை 2 படத்திற்கு இருவரும் இணைந்து பணியாற்ற உள்ளனரா? என ரசிகர்கள் மனதில் கேள்வி எழும்பி உள்ளது.

படகுழுவுக்கு நன்றி கூறிய தனுஷ்

படகுழுவுக்கு நன்றி கூறிய தனுஷ்

இன்று படப்பிடிப்பு நிறைவடைந்ததை ட்விட்டரில் குறிப்பிட்டு இருந்த தனுஷ் இயக்குனர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் தாணு, மற்றும் அவருடன் இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் நன்றி தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணனுக்கு ஸ்பெஷலாக நன்றி கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X