கர்ணன் படத்தின் சூப்பர் அப்டேட்.. படக்குழு நாளை அறிவிப்பு!
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்பபடம் கர்ணன்.
Recommended Video
இந்த படத்தை கலைப்புலி S. தாணு தயாரிக்கிறார், சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்த படத்தினுடைய பெரிய அப்டேட் ஒன்றை படக்குழு நாளை வெளியிட திட்டமிட்டுள்ளது.

வீடியோ வெளியீடு
சில மாதங்களுக்கு முன்னர் கர்ணன் படக்குழு படத்திற்காக ஒரு கிராமத்தையே மிகவும் நம்பும்படியாக செட் போட்டு கலை பணியில் அசத்தி இருந்தனர். அது குறித்த வீடியோ ஒன்றையும் முன்னர் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

பிஸியாக தனுஷ்
கோலிவுட் நடிகர்கள் மத்தியில் தற்போது மிகவும் பிஸியாக உள்ள நடிகர் தனுஷ். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என தொடர்ந்து படம் நடிக்கும் பணிகளில் கவனம் செலுத்தி வரும் தனுஷ் கர்ணன் படத்திற்கான பணிகளை முன்னரே முடித்து கொடுத்தார். படத்தின் படப்பிடிப்பும் முடிந்தது.

ரசிகர்கள் மகிழ்ச்சி
இதையடுத்து சமீபத்தில் இந்த படத்தினை பார்த்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் படத்தை மிகவும் வியந்து பாராட்டினார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனால் கர்ணனை எதிர்நோக்கி காத்திருந்த தமிழ் சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
தற்போதைய நிலைமையில் தனுஷின் ஜகமே தந்திரத்தை காட்டிலும் கர்ணன் படத்தின் மேல் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் படக்குழு நாளை காலை 11 மணிக்கு பெரிய அப்டேட் ஒன்றை அளிக்க உள்ளதாக கூறி வாளுடன் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











