தனுஷ் மட்டும் மிஸ்சிங்.. மொத்த கர்ணன் டீமும் தியேட்டரில் ரசிகர்களுடன் படத்தை பார்த்து கொண்டாட்டம்!
சென்னை: நடிகர் தனுஷின் கர்ணன் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
Recommended Video
கர்ணன் FDFS கொண்டாட்டத்தை தனுஷ் ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர்.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் என ஒட்டுமொத்த கர்ணன் டீமும் ரசிகர்களுடன் படத்தை கொண்டாடி உள்ளனர்.

கர்ணன் தயாரிப்பாளர்
வி கிரியேஷன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் கர்ணன் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும், கர்ணன் ரிலீசில் எந்தவொரு மாற்றமும் இல்லை என அறிவித்து கர்ணன் திரைப்படத்தை வெளியிட்டுள்ள கலைப்புலி எஸ். தாணு சென்னை ரோகிணி திரையரங்கில் கர்ணன் படக்குழு மற்றும் ரசிகர்களுடன் இணைந்து படத்தை பார்த்துள்ளார்.

தியேட்டரில் மாரி செல்வராஜ்
பரியேறும் பெருமாள் எனும் தரமான படத்தை இயக்கி பலரையும் திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் மாரி செல்வராஜ் கர்ணன் எனும் அடுத்த சம்பவத்தை செய்து விட்டு ரசிகர்களின் ரியாக்ஷனை நேரடியாக காண தியேட்டரில் ரசிகர்களுடன் ரசிகராக கர்ணனை திரையில் பார்த்து கொண்டாடி வருகிறார்.

சந்தோஷ் நாராயணன்
கண்டா வர சொல்லுங்க தொடங்கி உட்ராதீங்க யப்போ வரை கர்ணன் படத்திற்காக ஒவ்வொரு பாடலையும் தனது இசையால் செதுக்கி உள்ள இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் கர்ணன் படத்தை படக்குழுவினர் மற்றும் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்த்து உள்ளார்.

குட்டி அசுரன்
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படத்தில் தனுஷின் மகனாக நடித்த நடிகர் கென் கருணாஸும் கர்ணன் படத்தை முதல் காட்சியே பார்க்க படக்குழுவினருடன் தியேட்டர் விசிட் அடித்துள்ளார். கர்ணன் படக்குழுவினரை கண்ட ரசிகர்கள் விசில் அடித்து உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர்.

தனுஷ் மட்டும் மிஸ்சிங்
ஹாலிவுட் படமான தி கிரே மேன் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ள நடிகர் தனுஷ், கர்ணன் FDFS திருவிழாவில் பங்கேற்கவில்லை. காலையிலேயே தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று முதல் கர்ணன் ரிலீஸ் என ட்வீட் போட்டு தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார். கர்ணன் படத்திற்காக இன்னொரு தேசிய விருதும் தனுஷுக்கு கிடைக்கும் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











