கர்ணன் திரைபடத்தின் டீசர் வெளியானது.. மிரட்டலான கதைக்களம்! பெரும் எதிர்பார்ப்பு
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள 'கர்ணன்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், தனுஷ், லால், யோகிபாபு, நட்டி, ராஜீஸ்கா விஜயன் உள்பட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் கர்ணன். இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார்.
கர்ணன் படத்தில் இருந்து வெளியான கண்டா வரச்சொல்லுங்க கர்ணணன் கையோடு கூட்டி வாருங்க என்ற பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி உள்ளது. இதேபோல் நாட்டுபுற பாடலான பண்டாரத்தி புராணம் பாடலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கர்ணன் படத்தின் கதை விளிம்பு நிலை மக்களின் கதை என்பது, பட்டியலன மக்களின் உண்மை கதை என்று பரவலாக பேசப்பட்டு வந்தத. அதற்கான விடை கர்ணன் படத்தின் டீசர் அல்லது ட்ரெய்லர் வந்தால் தெரியும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது,.
இந்நிலையில் கர்ணன் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதில் கதைக்களம் இப்போதைய காலத்து கதை களம் போல் இல்லை. 1990களில் கதைகளம் போல் தெரிகிறது. விளிம்பு நிலை மக்களுக்காக போராடும் ஹீரோ கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருப்பது தெரிகிறது. அசுரன் படத்தை போல் இப்படமும் இருக்கும் என்று எதிர்பார்ப்பை டீசர் உருவாக்கி உள்ளது.
படத்தின் டீசரில் குதிரையிலேயே தனுஷ் வருகிறார். பேருந்தில் சண்டை, ஊரில் மொத்தமாக மக்கள் சண்டை, காவல்துறையின் கொடுமை என சில காட்சிகள் உள்ளது. ஆனால் கதை என்ன என்பதை ஊகிக்கவே முடியாத அளவிற்கு உள்ளது. படம் ஏப்ரல் 9ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











