தியேட்டருக்கு வரும் கர்ணன்.. தனுஷ் என்ன சொல்லியிருக்கார் பாருங்க.. குஷியில் ரசிகர்கள்!

சென்னை: கர்ணன் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகிறது என்ற அறிவிப்பை தொடர்ந்து நடிகர் தனுஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் 'கர்ணன்'. இதில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். திருநெல்வேலி அருகே கிராமம் போன்ற செட் அமைத்து படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

ஏப்ரலில் ரிலீஸ்

ஏப்ரலில் ரிலீஸ்

டிசம்பர் 9-ம் தேதியுடன் இத்திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததாக படக்குழு தெரிவித்தது. இந்நிலையில் இத்திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் திரையரங்கில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

தனுஷ் அறிக்கை

தனுஷ் அறிக்கை


இதற்காக ஸ்பெஷல் டீசரும் நேற்று வெளியானது. டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆவது குறித்து நடிகர் தனுஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஊக்கமளிக்கும் செய்தி

ஊக்கமளிக்கும் செய்தி

அதில் கூறியிருப்பதாவது, கர்ணன் ஏப்ரல் 2021ல் திரையரங்குகளில் வெளியாகிறது. சரியான நேரத்தில் மிகவும் தேவையான ஊக்கமளிக்கும் செய்தி. நன்றி தானு சார், உங்களுக்கு வேறு வழிகள் இருந்தபோதிலும், தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், பார்வையாளர்கள் என அனைவரின் வாழ்வாதாரம் குறித்து யோசித்ததற்கும் நன்றி.

ஓம் நமசிவாயா

ஓம் நமசிவாயா

எனது ரசிகர்கள் சார்பாக ஒரு பெரிய நன்றி, இது அவர்களுக்கு பெரிய விஷயம். அனைவரையும் நேசிக்கிறேன். ஸ்பிரட் லவ்.. ஓம் நமசிவாயா.. இவ்வாறு தனுஷ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனை தனது டிவிட்டர் பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார் தனுஷ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X