தட்டான் தட்டானாக மாறிய திரெளபதையின் முத்தம்.. இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம்?

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் மூன்றாவது பாடல் இன்று மாலை வெளியாகிறது.

நடிகர் தனுஷ் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் மூன்றாவது பாடல் டைட்டில் திரெளபதையின் முத்தம் என பதிவிட ஏகப்பட்ட சர்ச்சை வெடித்தது.

இந்நிலையில், தற்போது திரெளபதையின் முத்தத்தை சின்னதாக மாற்றி தட்டான் தட்டான் என்பதை ஹைலைட் செய்துள்ளனர் கர்ணன் படக்குழுவினர்.

தனுஷின் கர்ணன்

தனுஷின் கர்ணன்

அசுரன் படத்தைத் தொடர்ந்து தனுஷ் தமிழில் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் படம் கர்ணன். கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், கெளரி கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வரும் ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வருகிறது.

கண்டா வர சொல்லுங்க

கர்ணன் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஃபர்ஸ்ட் சிங்கிளான கண்டா வர சொல்லுங்க பாடல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. பறை இசை ஒலிக்க இயக்குநர் மாரி செல்வராஜ் வரிகளில் உருவான இந்த பாடலை கிடக்குழி மாரியம்மாள் பாடியிருந்தார்.

பண்டாரத்தி புராணம்

கண்டா வர சொல்லுங்க பாடலின் வெற்றிக்கு பிறகு தேனிசை தென்றல் தேவாவின் குரலில் பண்டாரத்தி புராணம் பாடல் வெளியானது. யுகபாரதியின் வரிகளில் வெளியான இந்த பாடலின் லிரிக் வீடியோவில் தனுஷ் போடும் நடன காட்சிகளை வைத்து பாடலை வேற லெவல் ஹிட் அடித்து விட்டனர் கர்ணன் படக்குழுவினர்.

திரெளபதையின் முத்தம்

திரெளபதையின் முத்தம்

கர்ணனன் பட டைட்டிலுக்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு எழுந்த நிலையில், அதன் பின்னர் எந்தவொரு சர்ச்சையும் கிளம்பவில்லையே என்று பார்த்த நிலையில், தனுஷ் நேற்று வெளியிட்ட மூன்றாவது பாடல் அறிவிப்பின் தலைப்பே சர்ச்சையை கிளப்பியது. கர்ணன் என்கிற டைட்டிலில் கதாநாயகனையும், காதலியாக திரெளபதியையும் மாற்றி திரெளபதையின் முத்தம் என இருக்கும் பாடல் தலைப்பு சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

திடீர் மாற்றம் ஏன்

திடீர் மாற்றம் ஏன்

இந்நிலையில், தற்போது இன்று மாலை கர்ணன் படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகும் என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆனால், நேற்று வெளியிட்டது போல திரெளபதையின் முத்தம் என கொட்டை எழுத்துக்களில் போடாமல், தட்டான் தட்டான் என படக்குழு மாற்றியுள்ளது. சர்ச்சையை தவிர்க்க இப்படி செய்ததா? பாடல் வெளியானால் இன்னும் சர்ச்சை வெடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஹாஷ்டேக் டிரெண்டிங்

ஹாஷ்டேக் டிரெண்டிங்

இன்று மாலை 4:04 மணிக்கு கர்ணன் படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகிறது. தட்டான் தட்டான் ஹாஷ்டேக்கை படக்குழு உருவாக்கினாலும், தனுஷ் ரசிகர்கள் #DraupathaiyinMuttham என்கிற ஹாஷ்டேக்கை தற்போது டிரெண்ட் செய்து வருகின்றனர். மேலும், இந்த பாடலை தனுஷ் அல்லது மாரி செல்வராஜ் ஆகிய இருவரில் யார் பாடியிருப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பும் எகிறி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X