கர்நாடக முதலமைச்சரையே கண் கலங்க வைத்த 777 சார்லி.. என்ன காரணம் தெரியுமா?

பெங்களூரு: செல்லப் பிராணியான நாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற நாயகன் செய்யும் டிராவல் தான் 777 சார்லி திரைப்படம்.

கன்னடத்தில் வெளியான கேஜிஎஃப் 2 திரைப்படம் இந்த ஆண்டு வசூல் ரீதியாகவும் மக்களை கவர்ந்தும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

அதனை தொடர்ந்து தற்போது உருவாகி உள்ள கன்னட திரைப்படமான 777 சார்லியும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கன்னட சினிமா

கன்னட சினிமா

மோசமான படங்களை கன்னட சினிமாவுடன் ஒப்பிட்டு வந்த நிலையை கடும் முயற்சியுடன் தற்போது அடுத்தடுத்த நல்ல படங்களை கொடுத்து மாற்றி வருகின்றனர். ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தையே ஆட்டம் காணும் விதமாக கேஜிஎஃப் 2 படத்தின் வசூல் இருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான 777 சார்லி திரைப்படமும் இந்தியளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

கேஜிஎஃப் 2

கேஜிஎஃப் 2

பாலிவுட், டோலிவுட், கோலிவுட், மல்லுவுட் என பல மாநில சினிமாவுக்கெல்லம் பின்னாடி கடைசி இடத்தில் இருந்த சாண்டில்வுட் எனும் கன்னட சினிமாவை இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் 2 திரைப்படங்கள் உலகளவில் அறிய வைத்து அசத்தி உள்ளது. அடுத்ததாக கன்னடத்தில் கிச்சா சுதிப் நடிப்பில் உருவாகி வரும் விக்ராந்த் ரோணா திரைப்படமும் மிரட்ட காத்திருக்கிறது.

என்ன கதை

என்ன கதை

விபத்தில் தனது குடும்பத்தை இழக்கும் தர்மா தனது இஷ்டத்துக்கு கரடு முரடான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அவரது வாழ்வில் சார்லி எனும் பெண் நாய் வந்து இணைகிறது. ஆரம்பத்தில் அந்த நாயை வெறுத்து ஒதுக்கும் ஹீரோ ஒரு கட்டத்தில் நாயின் பாசத்துக்கு ஆளாகிறார். சார்லியின் கடைசி ஆசையை நிறைவேற்ற அவர் செய்யும் விஷயங்கள் தான் படத்தை பார்க்கும் ரசிகர்களை கண் கலங்க வைக்கிறது.

 முதலமைச்சர்

முதலமைச்சர்

சமீபத்தில் வெளியான 777 சார்லி படத்தை பார்த்த கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி காட்டுத் தீயாக பரவி வருகின்றன. திரைப்படம் ஒன்றை பார்த்து இந்த அளவுக்கு கர்நாடக முதலமைச்சரே கண்ணீர் சிந்த என்ன தெரியுமா காரணம்.

Recommended Video

777 Charlie Movie Review| Rakshit Shetty | Yessa ? Bussa ?*Hollywood
என்ன காரணம்

என்ன காரணம்

செல்லப் பிராணிகளை வளர்ப்பது என்பது பசவராஜ் பொம்மைக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அவரது நாய்க்குட்டி ஒன்று உயிரிழந்த நிலையில், இந்த படத்தை பார்த்ததும், அவருக்கு அதன் ஞாபகங்கள் வந்தது தான் அப்படி அவர் கண்ணீர் சிந்தி அழ காரணம் என்கின்றனர். படத்தை பார்க்கும் பலரையும் இந்த 777 சார்லி அழ வைத்து விடுவது தான் அதன் வெற்றிக்கு காரணமாக மாறி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X